ஏன்டா அழுகிற.. மாமன் படம் பார்த்து அழுத சிறுமிக்கு வீடியோ கோல் செய்து பேசிய சூரி
“ஏன்டா அழுகிற..” மாமன் படம் பார்த்து அழுத சிறுமிக்கு வீடியோ கோல் செய்து பேசிய சூரியின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் சூரி
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் சூரி.

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்?
இவர், சினிமாவுக்கு காமெடி நடிகராக தான் அறிமுகமானார். அதன் பின்னர் கதாநாயகராக வெற்றிமாறன் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்க, அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு நடித்து வருகிறார்கள்.
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரியின் கதையில் உருவாகியுள்ள மாமன் திரைப்படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் இருந்து இப்போது வரை சென்டிமென்ட் படங்களுக்கு சென்னை சிட்டியில் பெரிதாக ஆடியன்ஸ் இல்லை என்றாலும் மற்ற மாவட்டங்களிலும் கிராமங்களிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர்.
தாய் மாமன் உறவு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும், அக்கா - தம்பி பாசம், கணவன் - மனைவி எப்படி அன்னோன்யமாக கடைசி காலம் வரை இருக்க வேண்டும் என்பதையும் கருவாகக் கொண்டு இந்த திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது.
வீடியோ கோலில் வந்த சூரி
இந்த நிலையில், திரைப்படம் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக சென்றுக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், நேற்றைய தினம் திரைப்படம் பார்க்க குடும்பம் ஒன்று சென்ற போது அதில் 7 வயது மதிக்கத்தக்க சிறுமியொருவர் மாமன் படத்தை பார்த்து அழுக ஆரம்பித்துள்ளது.
அப்போது சூரி அங்கிருந்த ஒருவருக்கு வீடியோ கோல் செய்து சிறுமியை சமாதானப்படுத்தியுள்ளார். அவர் அன்பாக சிறுமியை சமாதானப்படுத்தும் காட்சியை பார்க்கும் பொழுது சூரியின் நல்ல மனம் தெளிவாகிறது.
இந்த காணொளியை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |