பிரபல திரைப்பட பாடலாசிரியர் உயிரிழப்பு : தொடரும் அவலம்... பேரதிர்ச்சியில் திரையுலகம்
கொரோனா பாதித்ததை அடுத்து பிரபல மலையாள திரைப்பட பாடலாசிரியர் பூவாச்சல் காதர் காலமானார். அவருக்கு வயது 73.
இந்தியாவில் பெருகிவரும் கொரோனாவால் பல திரை கலைஞர்கள் மரணம் அடைந்திருக்கும் செய்தி சோகத்தை அளித்திருக்கிறது.
இந்த நிலையில்தான் 1970 மற்றும் 80 ஆண்டுகளில் மலையாள சினிமாவில் கோலோச்சிய கவிஞர் மற்றும் பாடலாசிரியர் பூவாச்சல் காதர் கொரோனா பாதித்து பின்னர் அதிலிருந்து மீண்டு வந்த பின்னர் உடல்நிலை பாதிப்பினால் சிகிச்சை பலனின்றி உயிரிழர்ந்திருக்கிறார்.
தன்னுடைய காதல் மெலடி பாடல்களால் மலையாள ரசிகர்களை கட்டிப்போட்ட பூவாச்சல் காதர் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார்.
முன்னதாக கொரோனா தொற்றால் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பூவாச்சல் காதர், அதிலிருந்து குணம் அடைந்தார்.
ஆனால் அதன் பின்னர் அவருடைய உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாகவும் அதற்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்த போது மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இவருடைய மறைவுக்கு மலையாள திரை உலகம் இரங்கல் தெரிவித்து வருகிறது. இதனிடையே பூவாச்சல் காதரின் இழப்பு இலக்கிய உலகுக்கு மிகப் பெரிய இழப்பு என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.