பேரதிர்ச்சி...பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் பூட்டிய வீட்டில் சடலமாக மீட்பு
பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவையில் பிறந்த பாடலாசிரியர் கபிலன் நடிகர் விக்ரம் நடிப்பில் தில் படத்தில் இடம்பெற்ற 'உன் சமையல் அறையில்' என்கிற சூப்பர் ஹிட் பாடல் மூலம் பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். விரைவில் வரவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்நிலையில் இவரது மகள் தூரிகை அரும்பாக்கம் ஏ.டி.எம் காலனியில் வசித்து வரும் அடுக்கு மாடி வீட்டில் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பூட்டிய வீட்டில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் இளம் வயதில் தூரிகையின் மரணம் ஒட்டு மொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.