நுரையீரல் மீன் பற்றி தெரியுமா? உயிர்வாழ தண்ணிரே வேண்டாமாம்
பொதுவாக மீன்கள் தண்ணீரில் வாழ்வதை தான் அவதானித்திருப்போம். ஆனால் தண்ணீர் இல்லாமல் வாழும் நுரையீரல் மீனைக் குறித்து தற்போது தெரிந்து கொள்வோம்.
நுரையீரல் மீன்
அறிவியல் ரீதியில் தெளிவான பதில் கொடுக்கமுடியாத பல விடயங்கள் பூமியில் உள்ளன. ஆம் மீன் வகைகள் தண்ணீரில் தான் உயிர்வாழும் என்பதை நாமும் அவதானித்திருக்கின்றோம்.
அரியவகை மீன் ஒன்று தண்ணீர் இல்லாமல் பல மாதங்கள் உயிர் வாழமுடியுமாம். இந்த அரிய மீனானது ஆப்பிரிக்க நுரையீரல் மீன் ஆகும்.
இந்த மீன் எந்த உணவு இல்லாமலும், தண்ணீர் இல்லாமலும் வாழக்கூடியதாகும். அதாவது புதிய நீர் சூழல்கள் கிடைக்கும் போது மட்டும் தான் உறக்கநிலையிலிருந்து எழும்புமாம்.
Views Addict என்ற இன்ஸ்டாகிராம் பயனர் நுரையீரல் மீனின் வீடியோவை Instagram இல் பகிர்ந்துள்ளார். நுரையீரல் மீன்கள் வறண்ட சேற்றில் மாதங்கள் அல்லது வருடங்கள் கூட செயலற்ற நிலையில் இருக்கும் என்றும், உயிர்வாழ தண்ணீர் தேவையில்லை என்றும் வீடியோவுடன் கூடிய குறிப்பு கூறுகிறது.
குறித்த காணொளியில் காணப்படும் மீன்கள் சக்கர்மவுத் கேட்ஃபிஷ் மற்றும் காமன் ப்ளெகோ என்று அழைக்கப்படுகின்றன என்று குறிப்பிடுகிறார்.
ஆப்பிரிக்க நுரையீரல் மீன் நான்கு ஆண்டுகள் வரை தண்ணீர் இல்லாமல் உயிர்வாழும் என்று குறிப்பு கூறுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |