இளம் வயதினரை குறி வைக்கும் நுரையீரல் புற்றுநோய்- இனி செய்யாதீங்க!
உலகில் உள்ள மக்கள் அனுபவிக்கும் நோய்களில் நுரையீரல் புற்றுநோய் மிக மோசமானது.
தொடர்ந்து பல வருடங்களாக புகைப்பிடிப்பவர்களுக்கு இந்த நோய் வர வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால் தற்போது புகைப்பிடிக்காத இளைஞர்களும் இந்த புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
பெண்கள் மற்றும் இளைஞர்கள் என இளம் வயதினரை குறி வைக்கும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு குறித்து விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். ஏனெனின் எமது சமூகத்தில் நுரையீரல் புற்றுநோய் பற்றிய தவறான வதந்திகள் அதிகமாக உள்ளது.
இது குறித்து பூரணமான விளக்கத்தை தெரிந்து கொள்வதால் நாம் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.
அப்படியாயின், நுரையீரல் புற்றுநோய் பற்றிய கட்டுக்கதைகளையும், அதற்கான அறிவியல் விளக்கத்தையும் தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
இதெல்லாம் நம்பாதீர்கள்
கட்டுக்கதை | உண்மை |
பல வருடங்களாக தொடர்ந்து புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமே நுரையீரல் புற்றுநோய் வர அதிகமான வாய்ப்பு உள்ளது. | நுரையீரல் புற்றுநோய் புகைப்பிடிப்பதால் வருவது மட்டுமல்லாமல் காற்று மாசுபாடு, சிகரெட் பிடிப்பவர்களின் அருகில் அமர்ந்திருத்தல், சமையல் புகை, மரபியல் மற்றும் ரசாயன வெளிப்பாடுகள் உள்ளிட்ட காரணங்களாலும் ஏற்படும். |
நுரையீரல் புற்றுநோயில் வயதானவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். | நுரையீரல் புற்றுநோயால் இளம் வயதில் உள்ள இளைஞர்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் அதிகமாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு வரும் இருமல், மார்பு வலி மற்றும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் கூட நாளடைவில் நுரையீரல் பிரச்சினையாக மாறலாம். |
அறிகுறிகள் இல்லாலமல் நுரையீரல் புற்றுநோய் வராது. | நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள் இல்லாமலும் வரும். வளர்ச்சி கட்டத்தில் எந்தவித அறிகுறியும் இருக்காது. அதிகமான மூச்சுத் திணறல் வரும் பொழுது உரிய மருத்துவரிடம் ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்தளவு காற்று மாசுபட்ட இடங்களுக்கு செல்லாமல் இருக்க வேண்டும். முடிந்தளவு மருத்துவ பரிசோதனைகளை தொடர்ந்து செய்து வர வேண்டும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
