தோள்பட்டை, கழுத்து பகுதியில் அடிக்கடி வலி வருதா? அப்போ இந்த புற்றுநோயாக இருக்கலாம்
பொதுவாக தற்போது இருப்பவர்களில் பலருக்கு புற்றுநோய் மற்றும் இதயம் சார்ந்த பிரச்சினைகள் இருக்கின்றன.
ஏராளமானோரின் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமையும் புற்றுநோய் வகைகளில் ஏகப்பட்ட வகை இருந்தாலும் அதில், நுரையீரல் புற்றுநோய் முதல் இடத்தை பிடிக்கிறது. இந்த புற்றுநோய் நுரையீரலில் உள்ள செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியினால் ஏற்படுகின்றது.
ஆரம்பத்தில் இந்த நோய்க்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால் உயிரிழப்பு ஏற்படும். நுரையீரல் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டுபிடிக்காமல் இருந்தால் அதனால் ஏகப்பட்ட பக்க விளைவுகள் ஏற்படலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அப்படியாயின், நுரையீரல் புற்றுநோய் இருப்பதை கண்டுபிடிப்பதற்கு சில அறிகுறிகள் உள்ளன. இது தொடர்பாக தெளிவாக பதிவில் பார்க்கலாம்.
அறிகுறிகள்
1. திடீரென்று தொடர்ச்சியான இருமல் அல்லது எக்காரணமும் இல்லாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
2. நுரையீரல் புற்றுநோய் இருப்பவர்களுக்கு தோள்பட்டை வலி இருக்கும். அப்படியானவர்கள் உரிய மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனின் புற்றுநோய் கட்டிகள் இருப்பவர்களுக்கு தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் வலி இருக்கும்.
3. வழக்கத்திற்கு மாறாக இருமல், மூச்சுத் திணறல், மார்பு வலி, தொண்டை கரகரகப்பு அல்லது விவரிக்க முடியாத எடை இழப்பு உள்ளிட்ட அறிகுறிகள் அடிக்கடி இருந்தாலும் புற்றுநோயின் தாக்கமாக இருக்கலாம்.
4. தலைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படுவதால் முகத்தில் திடீரென வீக்கம் உண்டாகும். வழக்கத்திற்கு மாறாக வரும் முக வீக்கம் கூட அறிகுறியாக இருக்கலாம்.
காரணங்கள்
- புகைப்பிடிப்பது மற்றும் புகைப்பிடிப்போரின் அருகில் இருப்பதால் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- காற்று மாசுபாடு, ஆஸ்பெஸ்டாஸ், ரேடான், யுரேனியம், டீசல் வெளியேற்றம், சிலிகா, நிலக்கரி பொருட்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களில் இருந்து வெளிவரும் வாயு, புகை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை துண்டுகிறது.
- குடும்பத்தில் யாருக்கேனும் நுரையீரல் புற்றுநோய் இருந்தால் அது பரம்பரை வழியாக அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றது.
- மார்பக புற்றுநோய் அல்லது லிம்போமா போன்றவற்றிற்கு மார்பு பகுதியில் கதிர்வீச்சு சிகிச்சைகளை மேற்கொண்ட ஒருவருக்கு இந்த நோயின் தாக்கம் இருக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
