சில நிமிடங்களில் நிகழும் சந்திர கிரகணம்.. எந்த ராசிக்காரர்களுக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?
இன்று இரவு சந்திர கிரகணம் நடைபெற உள்ள நிலையில், இதனால் சாதகமான சூழல் எந்த ராசிக்கு என்றும் பாதகமாக சூழல் எந்த ராசிக்கு என்பதையும் தெரிந்து கொள்வோம்.
இன்று மேஷ ராசியில் இந்த சந்திர கிரகணம் நிகழ உள்ளது. அதாவது இரவு 11.31 மணி முதல் அதிகாலை 3.36 மணி வரை நீடிக்கும் இந்த கிரகணத்தின் இந்த நேரம் சிக்கலானதாக கருதப்படுகின்றது.
குறிப்பாக சந்திரன் மனம், மனநிலை, எண்ணங்கள், பணம், வாழ்க்கை தொடர்புடைய கிரகமாக பார்க்கப்படுவதால், எந்த ராசிக்கு பாதகம்? எந்த ராசிக்கு சாதகம்? என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்
இந்த சந்திர கிரகணத்தின் போது மேஷ ராசியினர் தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க கூடுதல் முன்னெச்சரிக்க எடுக்க வேண்டுமாம். கவலை, விரக்தி மற்றும் கண்கள் மற்றும் கீழ் தாடை பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்
குறித்த சந்திர கிரகணம் ரிஷப ராசியினருக்கு சாதகமாக இல்லை. இவர்களின் வெற்றிப்பாதை தடைபடவும், சிறந்த வேலையின் துறையை தேர்ந்தெடுப்பது சவாலாகவும் இருக்கும். நிலையற்ற மற்றும் நிச்சயமற்ற தன்மையை சந்திக்கும் இவர்கள், பாதுகாப்பு கவனம் செலுத்துவது முக்கியமாகும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த சந்திர கிரகணம் சாதகமான பலனை தரும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையும் இவர்கள், தனிப்பட்ட வாழ்க்கையில் சிறிய சிக்கல்களை சந்திக்க நேரிடும். கணவன் மனைவிக்குள் பிரச்சினையும் எழலாம்.

கடகம்
கடக ராசியினருக்கு இந்த சந்திர கிரகணம் குடும்ப திருப்தி மற்றும் தனிப்பட்ட சொத்துக்களை பாதிக்கும் நிலை ஏற்படும். ஆர்வமின்மை, விரக்தியில் இருக்கும் நீங்கள், சுற்றி நடக்கும் விடயங்களிலிருந்து உங்களை தனிமைப்படுத்திக் கொள்வீர்கள். இந்த கிரகணம் தனிப்பட்ட மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பை கொண்டு வரும்.
சிம்மம்
சிம்ம ராசியினர்கள் ஒவ்வொரு விஷயத்தையும், வித்தியாசமான கண்ணோட்டத்தையும், அணுகுமுறையையும் கையாள்வதுடன், நல்ல பலன்களையும் பெறுவார்கள். வாழ்க்கையும் சிறப்பாகவே அமையும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு இந்த கிரகணம் சாதாகமான பலனை அளிக்காது. பணியிடத்தில் சில சிக்கல்களை சந்திக்கும் இவர்கள், நிதி நிலையிலும் நெருக்கடியை சந்திப்பதுடன், சில சிக்கல்களையும் சந்திப்பார்கள்.

துலாம்
துலாம் ராசியினருக்கு இந்த கிரகணம் உணர்ச்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்துமாம். பதற்றம் மற்றும் மோதல் உணர்வை உணர்வதுடன், தங்களது தனிப்பட்ட தேவைகள் மற்றும் உறவுகளுக்கு இடையில் சிக்கலை ஏற்படுத்தும். நீங்கள் எந்தவொரு சவால்களையும் நிர்வகிக்க முடிவதுடன், மற்றவர்களிடம் கவனமாக பேசவும்.
விருச்சிகம்
இந்த சந்திர கிரகணமானது விருச்சிக ராசியினரின் வாழ்க்கையில் சமநிலையை ஏற்படுத்துவதுடன், வாழ்க்கையில் பல அம்சங்களை நீங்கள் சிறந்த முறையில் புரிந்து கொள்ளவும் முடியுமாம். இவை உங்கள் வாழ்க்கையில் முன்னேற உதவுமாம்.
தனுசு
தனுசு ராசியினர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சில சவால்களையும் சந்திக்க நேரிடும். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும்.

மகரம்
மகர ராசியினருக்கு இந்த சந்திர கிரகணம் சாதகமான பலனை கொடுக்கும். வாழ்க்கையில் வெற்றி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இருக்கும். சம்பளம் மற்றும் பதவி உயர்வு, கூடுதல் பொறுப்புகளை பெறுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு அசைக்க முடியாத முயற்சிகளை செய்யும் சூழல் இந்த சந்திர கிரகணத்தில் இருக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும்.
மீனம்
மீன ராசிக்கு இந்த சந்திர கிரகணம் கலவையான பலனை தருவதுடன், வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும், இனிமையான சூழல் எப்போதும் இருக்கும். கவலைப்படாமல் இருத்தல் வேண்டும். வலிமிகுந்த சூழ்நிலை விரைவில் கடந்துவிடும். கிரகணத்திற்கு பின்பு இயல்பு நிலை ஏற்படும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |