இன்னும் 5 நாட்களில் சந்திர கிரகணத்தால் ஏற்பட போகும் அதிரடி மாற்றம்! யாருக்கு பணக்கார யோகம் தெரியுமா?
வருடத்தின் கடைசி சந்திர கிரகணம் வரும் 8ஆம் தேதி செவ்வாய்கிழமை மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் நிகழ்கிறது.
இந்த கிரகணம் முழு சந்திர கிரகணம்.
சந்திர கிரகணத்தால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் யாருக்கு என்ன மாதிரியான பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்
இந்த சந்திர கிரகணத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது. அதுவும் ராகு உடன் இணையும் காலத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனமாக இருக்கவும்.
ரிஷபம்
உங்கள் ராசிக்கு நிறைய செலவுகள் வரலாம். பெரிய அளவில் பணமுதலீடுகளை செய்யாமல் தவிர்ப்பது நல்லது. வெளி உணவுகளை தவிர்க்கவும்.
மிதுனம்
திடீர் பண வரவுகள் வரும். கிரகணம் முடிந்த பின்னர் குளித்து விட்டு பூஜை செய்வது நல்லது.
கடகம்
பண வரவு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த நல்ல காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
சிம்மம்
நீண்ட நாட்களாக கடனாக கொடுத்திருந்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். கை விட்டு போன சொத்துக்கள் வீடு தேடி வர வாய்ப்புள்ளது.
கன்னி
உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்ட வேண்டும். பண விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது நல்லது.
துலாம்
நீண்ட நாட்களாக இருந்த பண பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கிரகண யோகம் கைகூடி வரப்போகிறது. திடீர் ராஜயோகம் வர வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.புதிய முயற்சிகளை அன்றைய தினம் தவிர்த்து விடுவது நல்லது.
தனுசு
பங்குச்சந்தைகளில் செய்திருந்த முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை தரும். நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.
மகரம்
உங்களுக்கு சுப செலவுகள் அதிகரிக்கும். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை தருவார்கள். அதே நேரத்தில் பண வரவும் அதிகரிக்கும் சேமிப்பும் கூடும்.
கும்பம்
மிகப்பெரிய வெற்றி கிடைக்கப்போகிறது. உங்களுக்கு இருந்த சிக்கல்கள் நீங்கி நல்ல நேரம் தொடங்கப்போகிறது. பண விசயத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கப்போகிறது.
மீனம்
நீண்ட நாட்களாக இருந்த பண நெருக்கடிகள் நீங்கும். கிரகண நாளில் யாருக்கும் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.