செவ்வாயின் ராசி மாற்றம்! பணத்தில் குளிக்கும் ராசிகள் யார் தெரியுமா?
செவ்வாய் பகவான் ரிஷப ராசி பயணத்தினால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசியினர்களை இங்கு தெரிந்து கோள்வோம்.
செவ்வாய்
நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வரும் செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசியினை மாற்றக் கூடியவர்.
மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வரும் இவர், தனது சொந்த ராசியான மேஷ ராசியில் பயணித்து வருகின்றார்.
இந்நிலையில் வரும் 12ம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கின்றார். இது சுக்கிர பகவானின் சொந்த ராசியாகும்.
செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் பயணிக்கின்ற போது அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கு கட்டாயம் உள்ள நிலையில், ஒரு சில ராசிகளுக்கு யோகமான வாழ்க்கை கிடைக்கப்போகின்றது. எந்ததெந்த ராசிகள் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி
மேஷ ராசியில் இரண்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணிக்க போவதால், எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.
பணவரவில் எந்தவொரு குறையும் இல்லாமலும், நிதி நிலையில் நல்ல முன்னேற்றமும் கிடைக்கும். சம்பாதித்த பணம் உங்களை தேடி வந்து சேருவதுடன், மனதில் தைரியம் மற்றும் துணிச்சல் அதிகரிக்கக்கூடும். பேச்சுதிறமையால் காரியங்களில் வெற்றி காண்பீர்கள்.
குழந்தை வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருப்பதுடன், வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைப்பதுடன், உறவினர்களால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
ரிஷப ராசி
ரிஷப ராசியில் செவ்வாய் பகவான் முதல் வீட்டில் பயணிக்கும் நிலையில், நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. மன தைரியம் அதிகரிப்பதுடன், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
பணவரவில் இருந்த குறை தீர்ந்து, நிதி நிலைமையில் நல்ல முன்னோற்றமும், பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
புதிய முதலீடுகளில் நல்ல லாபம் பெறுவதுடன், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைப்பதுடன், குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.
கடக ராசி
கடக ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பயணிக்க போகும்நிலையில், வசதி வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
நல்ல முன்னோற்றம் உங்களுக்கு கிடைப்பதுடன், நிதி நிலைமையிலும் ஏற்பட்ட சிக்கல்கள் குறையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுவதுமாக இருப்பதுடன், சிக்கிக் கிடந்த பணம் உங்களை வந்து சேரும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |