சுக்கிரன் பெயர்ச்சியால்.5 ராசிகளுக்கு பேரதிர்ஷ்டம்... உங்க ராசியும் இதுல இருக்குதா?
சுக்கிரன் பெயர்ச்சி
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்தின் பெயர்ச்சியும் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. மிகவும் சக்திவாய்ந்த மற்றும் நேர்மறையான கிரகங்களில் ஒருவராக இருப்பவர் தான் சுக்கிரன்.
அழகு, காதல், ஆடம்பரம், நிதி இவற்றிற்கான கிரகமாக இருக்கும் சுக்கிரன் நீர் ராசியான கடக ராசிக்கு நுழைகின்றார்.

கடகம்
இந்த பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு பொன்னான காலமாக அமையப் போகிறது. இதனால் உங்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும்.
வீட்டிற்கு ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். இந்த காலத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். உங்கள் சருமத்தில் பொலிவு இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுவதுடன், தொழிலில் புதிய வாய்ப்பும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி மற்றும் சம்பள உயர்வு ஏற்படும்.

கன்னி
கன்னி ராசியினர் இந்த பெயர்ச்சியினால் வருமானத்திற்கு புதிய வழி பிறப்பதுடன், பொன்னான காலமாகவும் அமைகின்றது.
நீண்ட காலம் வராமல் இருந்த பணம் தற்போது வந்து சேரும். சுற்றி இருப்பவர்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைப்பதுடன், அந்தஸ்தும் உயருமாம்.
துலாம்
துலாம் ராசியினருக்கு சுக்கிரன் 10 வீடான கர்ம ஸ்தானத்திற்கு செல்வதால், தொழிலில் மிகப்பெரிய திருப்புமுனை இருப்பதுடன், நல்ல நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும்.
வெளிநாடு செல்லும் வாய்ப்பும், பணியிடத்தில் பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளிடம் பாராட்டும், புதிய பொறுப்பும் உங்களை தேடி வரும். தொழிலில் புதிய வாடிக்கையாளர் கிடைப்பார்கள்.

மகரம்
மகர ராசியினரின் 7ம் வீடான சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் வரும் நிலையில், மிகச்சிறந்த பலனை பெறுவீர்கள். திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், இதுவரை இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்குமாம். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்புள்ளது.

மீனம்
சுக்கிரன் மீன ராசியில் 5ம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆவதுடன், மன மகிழ்ச்சி, நிம்மதி தேடி வருகின்றது.
குழந்தை பாக்கத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைப்பதுடன், கலை இலக்கிய துறையில் இருப்பவர்களுக்கு புகழும், புதிய வாய்ப்பும் கிடைக்கும்.
பூர்வீக சொத்துக்கள் மூலமாக லாபம் கிடைப்பதுடன், ஆன்மீக பயணங்களும் மேற்கொள்வீர்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |