ராகு கேது சஞ்சாரத்தினால் அதிர்ஷ்டத்தினை பெறும் 4 ராசியினர்
Rahu Ketu Lucky Zodiac: ராகு, கேது சஞ்சாரத்தினால் எந்தெந்த ராசியினர் நன்மையை பெறுகின்றனர் என்பதை தெரிந்து கொள்வோம்.
ராகு கேது சஞ்சாரம்
ஜோதிடத்தில் நிழல் கிரகங்களாக இருக்கும் ராகு மற்றும் கேது, ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய கிரங்களாக பார்க்கப்படுகின்றது.
ராகு கிரகமானது எதிர்பாராத முன்னேற்றம், திடீர் பணவரவு, வெளிநாட்டு வாய்ப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற பலன்களுடன் தொடர்பு படுத்தப்படுகின்றது.

இதே போன்று கேது கிரகமானது ஆன்மீகம், ஞானம், மனத்தெளிவு, கர்ம வினைகளுக்கான பலனைக் குறிப்பதாக இருக்கின்றது. ஒருவரது ஜாகத்தில் ராகு, கேது கிரகங்கள் சாதகமான இடங்களில் அமைந்திருந்தால், தடைபட்ட காரியங்கள் அனைத்தும் கைகூடுமாம்.
தற்போது ராகு கும்ப ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், கேது சிம்ம ராசியில் கஞ்சரிக்கின்றார். இந்த சஞ்சாரமானது கடந்த வருடம் மே மாதம் 18ம் தேதி தொடங்கியது.
வரும் டிசம்பர் 5ம் தேதி ராகு மகர ராசிக்கும், கேது கடக ராசிக்கும் பெயர்ச்சி அடையவுள்ளதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் ராகு கேது சஞ்சாரத்தினால் அதிர்ஷ்டத்தினை பெறும் 4 ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசியில் ராகு 11ம் இடத்தில் சஞ்சரிக்கும் நிலையில், இவை லாப ஸ்தானம் என்பதால் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகுமாம்.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதுடன், நண்பர்கள் மற்றும் புதிய அறிமுகங்கள் மூலமாக ஆதாயம் கிடைக்குமாம்.

ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு ராகு 10ம் வீட்டில் சஞ்சரிக்கும் நிலையில், இது கர்ம ஸ்தானம் என்று கூறப்படுகின்றது. வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
பணியில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிப்பதுடன் பதவி உயர்வும் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படுமாம்.

கன்னி
கன்னி ராசியினருக்கு ராகு 6வது இடத்தில் உள்ள நிலையில், சாதகமான இடமாக கருதப்படுகின்றது. நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சனைகள், போட்டிகள் என அனைத்தையும் சமாளிக்கும் மனதைரியம் கிடைக்குமாம்.
கடன் சுமையைக் குறைப்பதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படலாம். வேலை மற்றும் போட்டி தேர்வில் சாதகமான சூழல் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசியினருக்கு ராகு 3வது இடத்தில் சஞ்சரிக்கும் நிலையில், புதிய முயற்சிகளில் வெற்றி கிடைப்பதுடன், சுயதொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிக்கலாம்.
தகவல் தொழில்நுட்பம், ஊடகம், வெளிநாட்டு தொடர்புடைய துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்குமாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |