எந்த தாவரங்கள் வீட்டிற்கு அதிஷ்டத்தை கொடுக்கும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே எல்லா தாவரங்களும் நமக்கு சுத்தமான காற்றை தான் கொடுக்கின்றது. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் வாஸ்து சாஸ்திரம் என்று வந்து விட்டால், அதற்குரிய வகுக்கப்பட்ட சாஸ்திரங்களை கடைப்பிடித்தால் தான் நமக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
வாஸ்து அடிப்பமையில் சில தாவரங்களுக்கு மிகவும் முக்கிய இடமுண்டு. இந்த விஷயங்களின் அடிப்படையில் நம் பெரியோர்களும், சாஸ்திரங்களும் குறிபிடப்பட்டுள்ள அதிர்ஷ்டம் தரும் செடி வகைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
செண்பகப்பூ செடி
அதிர்ஷ்டம் உள்ளவர்களால் மட்டுமே இந்த பூ செடியை வீட்டில் வளர்க்க முடியும். அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் இந்த பூ கைகளில் கிடைக்கும்.நல்லநேரம் வரப்போகிறது என்றாலே, அதனை உணர்த்தும் வகையில் சில நல்ல விஷயங்கள் நம் வாழ்கையில் நடக்க துவங்கும்.
அந்த வரிசையில் இந்த பூ உங்கள் கைக்கு கிடைக்கிறது என்றால், நல்லநேரம், வெற்றிகள், மகிழ்ச்சியான நிகழ்வுகள் , எதிர்பாரத யோகம் உங்களுக்கு வரப்போகிறது என அர்த்தம். இந்த செடியை வீட்டில் வளர்த்தால் பணவரவு அதிகரிக்கும்.
முல்லைப்பூ செடி
முல்லைபூ செடி குருவின் அம்சமாக சோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்த முல்லை செடியினை வீட்டின் வடக்கு திசையில் வளர்ப்பது நல்லது. காடு போல வளர்க்காமல், தேவையில்லாத கிளைகளை கத்தரித்து பார்ப்பதற்கு அம்சமாக வளர்க்க வேண்டும். இதனால் குருவின் பார்வை கிட்டும்.அதனால் செல்வம் பெருகும்.
செம்பருத்தி
புதியதாக வீடு கட்டினாலோ அல்லது திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தாலோ செம்பருத்தி செடி ஒன்றினை நடுவார்களாம். மங்களகரமான நிகழ்வு தங்குதடை இன்றி, சிறப்பான முறையில் நடைபெறுவதற்காக இவ்வாறு நடப்படுவதாக கூறப்படுகிறது. செவ்வாய்தோஷம் இருப்பவர்கள் தங்கள் வீட்டுதோட்டத்தில் செம்பருத்தி செடியினை வளர்த்து வரும் போது, செவ்வாய் தோஷத்தின் தாக்கம் குறைவதாக கூறப்படுகிறது.
கற்றாழை
நம் வீட்டில் கற்றாழையை வளர்க்கும் போது நிச்சயம் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும். கற்றாழைக்கு நம் வீட்டில் உள்ள திருஷ்டிகளை விலக்கும் ஆற்றல் உண்டு. அதனால் கற்றாழையை வீட்டிற்கு முன்னால் தெருவில் போகிறவர்கள் கண்ணில் படும்படி வைத்தால் கண் திருஷ்டி விலகிவிடும். நேர்மறை ஆற்றல் வீட்டில் தங்கும்.
வெற்றிலை
வீட்டில் வெற்றிலை கொடியை வளர்த்தால் அதிர்ஷ்டம் வரும். வீட்டில் வளரும் வெற்றிலையை பறித்து ஆஞ்சநேயருக்கு மாலையாக தொடுத்து சாற்றினால், நமக்கு இருக்கும் எதிரிகள் தொந்தரவு விலகிவிடும்.
மணி பிளாண்ட்
மணி பிளான்ட் வளர்க்கும்போது அதனை வீட்டில் உள்ளே அல்லது பால்கனியில் வைத்து தான் வளர்க்க வேண்டும். இந்த செடி அதிர்ஷ்டத்தை அளித்தரும் மேலும் நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதில் முக்கிய இடம் வகிக்கின்றது. இதனை வீட்டில் வளர்த்தால் செல்வத்திற்கு பஞ்சமே இருக்காது.
பாம்பு கற்றாழை
வீட்டிற்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் தாவரங்களில் பாம்பு கற்றாழை முக்கியமானது. இது நச்சுக்களை உறிஞ்சி கொண்டு காற்றில் இருக்கும் ஒவ்வாமைகளை குறைத்துவிடுகிறது. வாஸ்து சாஸ்திரம் இதை அதிர்ஷ்டம் தரும் செடி என கூறுகிறது. இதனை படுக்கையறையில் வைத்தால் மிகவும் நல்லது.பண வரவை மேம்படுத்துவதில் இந்த செடி முக்கிய இடம் வகிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |