‘லப்பர் பந்து’ சஞ்சனாவா இது? ட்ரெண்டிங் லுக்கில் ஆளே மாறிட்டாங்களே!
‘லப்பர் பந்து’ பட நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ட்ரெண்டிங் லுக்கில் செட ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
‘வதந்தி’ வெப் சீரிஸில் வெலோனி கதாபாத்திரத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானாவர் தான் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி. அதனை தொடர்ந்து ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக ‘லப்பர் பந்து’ படத்தில் நடித்து ரசிக்களின் அமோக வரவேற்பை பெற்றதுடன் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
‘லப்பர் பந்து’ படத்துக்குப் பிறகு இவரது இன்ஸ்டா பக்கத்தில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்தது. அதனை தொடர்ந்து மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ படத்தில் உதவி இயக்குநராகவும், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகையாகவும் பணியாற்றியுள்ளார்.
திரைப்படங்களில் நடிப்பதுடன் ஒரு படத்தை இயக்கவும் சஞ்சனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
