சமையல் எரிவாயு தட்டுப்பாடு... மாற்றீடாக எதனை பயன்படுத்துவது சிறந்தது?
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் அண்மை காலமாக அரங்கேறிவரும் போரின் எதிரொலியாக தற்போது, சர்வதேச சந்தையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், பல மாநிலங்களில் தங்களின் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ள நிலையில், இது குறித்த தகவல்கள் மக்கள் மத்தியில் பெரும் பதற்றநிலையை தோற்றுவித்துள்ளது.

இந்தநிலை தொடர்ந்தால்,சமையலுக்காக எரிவாயுவை மட்டுமே நம்பியிருக்கும் பெரும்பாலான மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். எனவே ஒரு வேலை எரிவாயு தட்டுப்பாடு தொடரும் பட்சத்தில் இதற்கு தீர்வாக என்ன மாற்றீடுகளை பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சிறந்த மாற்றீடுகள்

மின்சார அடுப்புகள் : இன்டக்ஷன் குக்கர்கள் (Induction Cooker), மற்றும் ரைஸ் குக்கர்கள் எரிவாயுவுக்கு மிகச்சிறந்த மற்றும் பாதுகாப்பான மாற்றாக கருதப்படுகின்றது. அதனை பயன்படுத்துவதும் எரிவாயு அடுப்புகளை விட எளிதானது.
கான்போஜிட்/ஃபைபர் சிலிண்டர் (Composite/Fiber Cylinder): இந்த சிலிண்டர் பாதி எடை கொண்டது மற்றும் வெளிப்படையானது, இதனால் நீங்கள் எரிவாயு அளவைக் வெளியில் இருந்தே பார்க்கவும் முடியும்.மேலும் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாது. மறுசுழற்சி செய்யக்கூடியவையாகவும் இருக்கும்.

சோலார் குக்கர் (Solar Cookers): இந்த சோலார் குக்கருக்கு எரிபொருள் செலவு கிடையாது, மேலும் ஒருமுறை முதலீடு செய்து இதனை வாங்கினால், சூரிய ஒளியைப் பயன்படுத்தி வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயனை அனுபவிக்கலாம்.
உயிர் வாயு (Bio-Gas): சாணம், பண்ணைக் கழிவுகள், சமையலறைக் கழிவுகள் போன்ற கரிமப் பொருட்களை, காற்றில்லா சூழலில் நொதிக்கச் செய்து (Anaerobic digestion) உருவாக்கப்படும் ஒரு புதுப்பிக்கத்தக்க எரிபொருள் தான் உயிர் வாயு. விவசாயம் அல்லது கால்நடைகள் உள்ள வீடுகளுக்கு இது மிகவும் பொருத்தமானதாக இருபக்கும். கழிவுகளைக் கொண்டு வீட்டிலேயே நாம் எளிதாக எரிவாயுவை உற்பத்தி செய்து பயன்படுத்தலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |