முதுகு வலியால் அவதிப்படுகின்றீர்களா? தினமும் வெறும் 30 நிமிட நடைபயிற்சி போதும்
முதுகு வலியால் அவதிப்படும் நபர்கள் தினமும் 30 நிமிடம் நடைபயிற்சி மேற்கொண்டால் நல்ல ஒரு மாற்றத்தினை பெறலாம் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
முதுகு வலியால் அவதி
இன்றைய காலத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் பலருக்கும் முதுகுவலி ஏற்படுகின்றது. அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு வேலை செய்பவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாகவே இருக்கின்றது.
சமீபத்தில் ஆய்வு ஒன்றில், இரண்டு குழுக்களாக சில நபர்களை பிரித்து சில ஆலோசனைகளை கூறியுள்ளனர். சுமார் 54 வயதை நிரம்பியவர்களை வைத்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
பிசியோதெரபி மருத்துவர்களின் வழிகாட்டு நெறிமுறைககளை பின்பற்றி இந்த ஆராய்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் ஒரு குழுவினர் மட்டும் ஆறு மாத காலத்தில் தினமும் 30 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மற்றொரு பிரிவினருக்கு எந்தவொரு சிகிச்சையும், அறிவுரையும் வழங்கப்படாமல் அப்படியே இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் நடைபயிற்சி மேற்கொண்ட நபர்களுக்கு கீழ் முதுகு வலி குறைந்ததற்கான சாத்திய கூறுகள் காணப்பட்டுள்ளது.
சுமார் 112 நாட்கள் வலி இல்லாமல் இருந்ததை உணரப்பட்டதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |