லோ சுகர் ஆகிவிட்டதா? உடனே இந்த ஒரு பொருளை வாயில் போடுங்க...இறங்கிய வேகத்தில் ஏறிடும்!
சர்க்கரை அளவு குறைதல் என்பது இன்று பலருக்கு சாதாரணமாகவே ஏற்படுகின்றது.
உடலில் குளுக்கோஸ் அளவு 70 mg/dL க்கும் குறைவாக இருந்தால் அது லோ சுகர் என்று அழைக்கப்படுகின்றது. இந்த மாதிரியான சந்தரப்பத்தில் உடனடியாக அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லை என்றால் அது மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். திடீரென்று சர்க்கரை அளவு குறைய பல காரணிகள் உள்ளன.
சரியான நேரத்தின் சாப்பிடாதது, புரோட்டீன் குறைவாக எடுத்துக்கொள்ளுதல், சரியான நேரத்தில் இன்சுலின் மாத்திரைகளை உட்கொள்ளாதது, அதிக வேலை அழுத்தம் அல்லது மன அழுத்தம் , தூக்கமின்மை, பருவநிலை மாற்றம், பெண்களுக்கு மாதவிடாய் சமயம் போன்ற காரணங்களால் சர்க்கரை அளவு குறைகிறது.
சர்க்கரை அளவு குறையும் போது என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
சர்க்கரை அளவு அடிக்கடி குறைகிறது எனில் எப்போதும் கையில் சாக்லெட் வைத்துக்கொள்ளுங்கள்.
இதன் இனிப்பு தன்மை உடனே இன்சுலின் அளவை அதிகரித்துவிடும்.
சாக்லெட் மட்டுமின்றி ஃபிரெஷ் ஜூஸ் அருந்துவது, பழங்கள் சாப்பிடலாம், தேன் குடிப்பதும் நல்லது.