நகைபிரியர்களுக்கு குட் நியூஸ்... குறைந்த தங்கம் விலை - என்ன காரணம்?
இன்று தங்கம் விலை குறைந்ததற்கு பின்னணியில் இருக்கும் முக்கிய காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தங்கம் விலை
தற்போது அமெரிக்கா இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்துவதால் மக்கள் தங்கம் விலையில் அதிகரிப்பு வரும் என்று நினைத்தனர்.
ஆனால் இல்லை. தங்கத்தின் விலை தற்போது குறைந்துள்ளது. சர்வதேச தங்கத்தின் விலையில் உயர்வு இருந்தாலும் தற்போது ஆபரண தங்கம் சென்னையில் சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.1,25,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கான காரணங்கள்
போர் காலங்களில் மக்கள் தங்கத்தை நம்பாமல் டாலர்களிலும் முதலீட்டை செய்து வருகின்றனர். இதனால் இந்திய ரூபாய் போன்ற மற்றைய நாணயங்களில் தங்கம் வாங்குவோருக்கு அதன் விலை கொஞ்சம் குறையலாம்.
சந்தையில் தங்கத்தின் விலை லட்சத்தை தாண்டும் போது மக்கள் லாபத்திற்காக தங்கத்தை விற்பர். சந்தையில் விற்பனை அதிகரிக்கும்போது விலை தற்காலிகமாக மட்டுமே குறையும்.

தற்போது இருக்கும் தங்கத்தின் விலையால் தங்கம் விலை குறைவு என நம்பி இருக்க கூடாது. தங்கம் விலை திடீரென அதிகரிக்கும். இதே போல தான் இந்தியாவில் தங்கம் விலை இப்போது குறைந்திருப்பது தற்காலிகமானது.
விரைவில் தங்கம் விலை உயருவதற்கே அதிக வாய்ப்பு இப்போதைக்கு உள்ளது. இந்த நிலை தான் பெற்ரோல் டீசல் விலையிலும் இருக்கும். அமெரிக்கா ஈரான் போர் எப்படி செல்கின்றது என்பதை வைத்து தான் இவை எல்லாம் தீர்மானிக்கப்படும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |