குறைந்த ரத்த அழுத்தம் பிரச்சினையா? இந்த உணவுகளை எடுத்துக்காதீங்க
ரத்த அழுத்தம் என்பது உடம்பில் நிகழும் மிகவும் முக்கியமான செயலாகும். உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் என இரண்டு பிரச்சினைகள் பெரும்பாலான நபர்களிடையே காணப்படுகின்றது.
அதிலும் இந்த ரத்த அழுத்த பிரச்சினையானது இளம்வயதிலேயே ஏற்பட்டு, வயது அதிகரிக்கும் போது சதவீதமும் கூடுவதாக ஆய்வு கூறுகின்றது.
ரத்த அழுத்தம் என்பது ரத்தக் குழாய்களில் ஓடும் ரத்தமானது இதயத்துக்கு வரும்பொழுது ஒரு வேகத்திலும், வெளியேறும் போது வேறு வேகத்திலும் செல்வதே. பொதுவாக நபர் ஒருவருக்கு ரத்த அழுத்தம் என்பது 120/80 மி.மீ. என்ற அளவில் இருந்தால் எந்தவொரு பிரச்சினையும் இல்லையாம்.
இந்த அளவு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ அது மிகப்பெரிய பிரச்சினையை கொடுக்கும். அதிலும் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சில உணவை தவிர்க்கவும்.
பீட்ரூட் மற்றும் பூண்டு
சத்தான உணவு என்று கூறப்படும் பீட்ரூட் மற்றும் பூண்டு இவற்றினை குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
ஏனெனில் இவை ரத்த ஓட்டத்தை அதிகரி்க்கச் செய்யாமல், மிதமாக்கும் தன்மையை கொடுக்குமாம். இவற்றை உட்கொள்வதால் நமது ரத்த நாளங்கள் விரிவடைந்து, ரத்த அழுத்தத்தினை குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றது.
பீட்ரூட் மட்டுமின்றி, ஓமம், முட்டைக்கோஸ், வெங்காய தாமரை, கார முட்டைகோசு கீரை, பசலைக்கீரை, ப்ரோக்கோலி போன்ற காய்களும் ரத்த அழுத்தத்தை குறைக்கின்றது.
ஆதலால் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பூண்டு, பீட்ரூட் மற்றும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள காய்கறிகளை மிதமாக எடுத்துக்கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |