உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட காதல் ஜோடி: மோசமான செயலால் அதிர்ச்சி பொலிசார்
உல்லாச வாழ்க்கைக்கு பணம் தேவைப்பட்டதால் காதல் ஜோடிகள் கஞ்சா விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்று அதிகமுள்ள சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களில் பொலிசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்டம் பீளமேடு அடுத்த நேரு நகர் வீரியம் பாளையம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வாலிபர் ஒருவர் பெண்ணுடன் சென்றுள்ளதைக் கண்டு சந்தேகம் அடைந்துள்ளனர்.
பின்பு அவர்கள் இருவரையும் சோதனை செய்த போது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்ததையடுத்து, இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில், கோவை மாவட்டம் காந்தி மாநகரை சேர்ந்தவர் சூர்யா என்கிற சூரிய பிரகாஷ். இவரும், கோவையில் நர்சிங் படித்துவரும் விருதுநகரைச் சேர்ந்த வினோதினி என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
வினோதினி தனது படிப்பு முடிந்த நிலையில், சொந்த ஊருக்கு செல்லாமல் காதலருடன் ஊர் சுற்றியதோடு, இருவரும் சில மாதங்களுக்கு வாடகைக்கு ரூம் எடுத்தும் தங்கியுள்ளனர்.
அப்போது அவர்களுக்குச் செலவுக்குப் பணம் தேவைப்பட்டதையடுத்து, கஞ்சாவை வாங்கி தனது அறையில் வைத்து விற்பனை செய்தது தெரியவந்த நிலையில், இருவரையும் பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.
