நின்றால் அடி விழும்: காதலர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை! பகீர் காட்சி
இந்தியாவில் வட மாநிலங்களில் காதலிப்பவர்களுக்கும், காதல் திருமணம் செய்பவர்களுக்கும் வழங்கப்பட்ட நூதன தண்டனைக் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் தார் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனுடன் சென்றதோடு, இவர்களுக்கு குறித்த பெண்ணின் சகோதரி உதவி செய்துள்ளார்.
இதனால் ஆத்திரப்பட்ட குடும்பத்தினரும் உறவினர்களும் வீட்டை விட்டு ஓடிய இருவரையும் பிடித்து வந்ததோடு, அவர்களுக்கு உதவி செய்த சகோதரியையும் ஊர் மத்தியில் நிறுத்தி, அனைவருக்கு வேடிக்கை பார்க்கும் அளவிற்கு, இருசக்கர வாகனத்தின் டயரை கழுத்தில் தொங்கவிட்டு நடனமாடி கூறியுள்ளனர். குறித்த இளைஞருக்கு இதனுடன் சேர்த்து ஒரு கட்டையையும் வைத்து நடனமாடி கூறியுள்ளனர்.
அந்த பாடலுக்கு ஏற்றபடி மூன்று பேரும் நடனம் ஆட வேண்டும். மேலும் இடையே ஆட்டத்தினை நிறுத்தியதால் ஒருவர் குச்சியால் இளைஞரை அடித்துள்ளதும் காணொளியில் பதிவாகியுள்ளது.
குறித்த காணொளி வெளியாகி பெரும் சர்சசையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மனிதாபிமானம் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், அந்தப் பெண்ணின் தந்தை, சகோதரன் மற்றும் உறவினர்கள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரை கைது செய்ததோடு, இன்னும் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
A young tribal girl, her friend and a man with whom she eloped were punished by the young girl's family. Family members put tyres around their necks 4 out of 5 accused have been arrested @ndtv @ndtvindia @GargiRawat @manishndtv pic.twitter.com/JJgrweGtIY
— Anurag Dwary (@Anurag_Dwary) September 22, 2021