காதல் ஜோடியின் சிலைக்கு நடந்த திருமணம்! காதலர்களை என்ன செய்தார்கள் தெரியுமா?
குஜராத் மாநிலத்தில் உயிரிழந்த காதல் ஜோடிகளுக்கு சிலை அமைத்து அதற்கு திருமண் செய்து வைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிலைக்கு திருமணம்?
குஜராத் மாநிலம் தாபியில் வசிக்கும் கணேஷ் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சனா என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதல் விவகாரம் வீீட்டில் தாய்க்க்கு தெரியவரவே கடுமையாக எச்சரித்துள்ளார். அதே போன்று மணமகனின் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காதல் ஜோடிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காதலிக்கும் போது எதிர்ப்பை தெரிவித்த பெற்றோர்கள், தற்போது இறந்த பின்பு அவர்களைப் போன்று சிலை அமைத்து அதற்கு திருமணமும் செய்து வைத்துள்ளனர்.
குறித்த ஜோடிகளின் ஆத்மா சாந்தியடைய குடும்பத்தினர் இவ்வாறு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.