காதலியை வெட்டி விலங்குகளுக்கு தீனி போட்ட காதலன் - அடுத்தடுத்து வெளிவந்த உண்மைகள்
தன்னுடைய காதலியை கொன்று துண்டு துண்டா வெட்டி வீசிய, கோர சம்பவமொன்று டெல்லியில் அரங்கேறியுள்ளது.
காதல் விவகாரம்
டெல்லியில் கால்செண்டரில் ஊழியராக பணியாற்றி வரும் ஷர்தா வாக்கர் எனும் பெண்ணும், குர்கானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அஃப்தாப் பூனாவாலா என்பரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளார்கள்.
இவர்களின் திருமணம் குறித்து இரு வீட்டிலும் பல பிரச்சினைகள் எழுந்துள்ளது. இருவரும் வீட்டை விட்டு வெளியேறி டெல்லியில் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஷர்தா வாக்கர் தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு பல தடவைக் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அஃப்தாப் சம்மதம் தெரிவிக்கவில்லை இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
கொலை குறித்து சில உண்மைகள்
சம்பவ தினத்தன்று இருவருக்கும் சண்டை முற்றிய நிலையில் அஃப்தாப்,ஷர்தா வாக்கர் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இதனை மறைப்பதற்காக துண்டு துண்டாக வெட்டியில் டெல்லியில் பல இடங்களில் வீசியுள்ளார்.
சிறிது காலம் சென்று ஷர்தா வாக்கர் பெற்றோர இருவரையும் தேடி சென்ற நிலையில் குறித்த சம்பவம் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பெற்றோர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
மேலும் அஃப்தாப்பை கைது செய்து தற்போது விசாரனை நடந்து வருவதாகவும் விசாரனை முடிவில் தகுந்த தண்டனை வழங்கப்படும் எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.