காதலியின் அந்தரங்கத்தில் மிளகாய் பொடி தூவி காதலன் செய்த கொடுமை: பின்னணியில் பகீர் காரணம்
தனது காதலி அடுத்த ஆண்களுடன் பேசுவதை பொறுத்து கொள்ளாத காதலன் அவரைக் கொலை செய்து, அந்தரங்க பகுதியில் மிளகாய் பொடி தூவிய கொடுமை அரங்கேறியுள்ளது.
மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் குவாரிகாட் பகுதியில் வசிக்கும் பப்பு கடேவால்(25). இவர் ஷாலினி என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஷாலினியோடு வீரா என்ற நபர் அடிக்கடி பேசி வந்துள்ளார். மேலும் ஷாலினி மற்ற ஆண்களோடு பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பலமுறை கண்டித்து சண்டையிட்டுள்ளார்.
மீராவுடன் இருக்கும் நட்பை துண்டிக்க மறுத்த காதலியை கோபப்பட்டு கொலை செய்வதற்கு முடிவு செய்துள்ளார்.
அதற்கான சரியான சந்தர்ப்பத்த்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த நிலையில், ஷாலினி மீராவுடன் பேசுவதை சம்பவத்தன்று பப்பு அவதானித்துள்ளார்.
ஷாலினி திரும்பி வந்து கொண்டிருந்த நேரத்தில், கல்லால் அவரது தலையிலேயே அடித்து கொலை செய்ததோடு, அவரது அந்தரங்க பகுதியில் மிளகாய் பொடியையும் தூவியதோடு, அருகில் ஒரு கடிதத்தையும் எழுதி அதில் வீரா என்பவரையும் எழுதி வைத்துள்ளார்.
கடிதத்தை கைப்பற்றிய பொலிசார், விசாரணை மேற்கொண்டு, பெண்ணை கொலை செய்த பப்பு கடேவாலை சில மணிநேரத்திலேயே கைது செய்துள்ளனர்.