சடலமாக இருந்த காதலி! கண்ணீர் மல்க மாலை மாற்றி நடந்த திருமணம்: இளைஞர் எடுத்த சபதம்
இறந்த காதலியை இளைஞர் ஒருவர் திருமணம் செய்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இறந்த காதலியை மணந்த இளைஞர்
இந்தியாவில் அசாம் மாநிலத்தின் கொளகாத்தி நகரைச் சேர்ந்தவர் பிதுபன் தமுளி(27). இவர் பிராத்தனா போரா என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஆனால் துரதிர்ஷ்டமாக பிராத்தனா உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். பிராத்தனாவின் உடலை வீட்டில் வைத்து மரியாதை செலுத்திவந்த போது, பிதுபன் அங்கு திருமணத்திற்கு தேவையான பொருள்களுடன் வந்து திருமண சடங்கை செய்துள்ளார்.
சடலமாக கிடந்த காதலியின் கன்னத்தில் சந்தனம் வைத்து, நெற்றியில் குங்குமம் வைத்து, வெள்ளை நிற மாலையையும் போட்டு திருமண சடங்கை செய்துள்ளார்.
பின்பு பிரத்தானாவின் ஒப்புதலை வாங்குவது போன்று அவரும் ஒரு மாலையை அணிந்து கொண்டுள்ளார். மேலும் பிராத்தனாவின் உடல் முன்பு நின்று வேறு எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்ற சபதமும் எடுத்துள்ளார்.
RONGA SENDUR on the forehead girlfriend's body. Bitopan Tamuli's girlfiend Prarthana Bora died after suffering from complicated disease. Hearing the news he reached Prathana's house & painted RONGA SENDUR on the forehead of her body, exchanged BOR MALYA.#BitopanPrathanaLOVE pic.twitter.com/kyxKO48bh4
— Pranjit Saikia (@SaikiaPranjit) November 20, 2022