சினேகாவை பெண் கேட்டு சென்ற காதலர்! இறுதியில் உயிர் பலியில் முடிந்த தகராறு
காரைக்குடி அருகே பேச மறுத்த காதலி சினேகாவை இரும்பு கம்பியால் காதலன் கொடூரமாக அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலியை பெண் கேட்க சென்ற நபர்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மாத்தூர் வேல்முருகன் குடியிருப்பை சேர்ந்தவர் சினேகா (22). இவர் கல்லூரியில் மூன்றாம் படித்து வரும் நிலையில், கண்ணன்(29) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு இறுதியில் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் கண்ணன் பெண் கேட்க சினேகாவின் வீட்டிற்கு சென்ற போது, அவரது அக்காவிற்கு திருமணம் செய்து வைத்த பின்னர் பேசிக் கொள்ளலாம் என சினேகா குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
அப்பொழுது ஏற்பட்ட வாய் தகராறில் சினேகாவின் தாத்தாவை கண்ணன் கீழே தள்ளிவிட்ட நிலையில், பிரச்சினை காவல்நிலையம் வரை சென்றுள்ளது. பின்பு இரு குடும்பத்திற்கும் அவ்வப்போது சண்டை எழுந்ததால் காதலி சினேகா கண்ணனிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

தனியாக அழைத்த காதலன்
இந்நிலையில், காதலியை கொலை செய்வதற்கு திட்டமிட்ட கண்ணன், காதலியை அருகே இருந்த ரேஷன் கடைக்கு வரவழைத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே கண்ணன் தான் மறைத்து வைத்திருந்த கம்பியை எடுத்து சினேகாவின் தலையில் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்துவிட்டார். ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த சினேகா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
பின்பு தகவலறிந்து வந்த பொலிசார் சினேகாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், தப்பியோடிய கண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.