உலகிலுள்ள அனைத்து அம்சங்களையும் கட்டிபோடும் காதல் பற்றி தெரியுமா?
இந்த கலியுலகத்தில் நம்மை அறியாமல் தோன்றும் ஒரு உணர்வு தான் “காதல்” இந்த உணர்விற்கு இந்த உலகில் மயங்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது.
உலகை ஆட்டி பார்க்கும் சக்தி வாய்ந்த ஆயுதம் என்றுக் கூட கூறலாம்.
அன்பு, பாசம் போன்றவைகளுடன் அந்நியப்பட்டு நிற்பதுதான் காதல். இந்த உணர்வுக்கு மயங்காதவர் என்று எவரும் இல்லை. இதனை 90ஸ் காதல் 2 கே காதல் என பிரித்து பார்க்க விரும்பவில்லை.
எப்போது வந்த காதலாக இருந்தாலும் சரி அது உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கின்றதா? என்பது தான் முக்கியம். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் காதலின் மகிமையை தெரிந்து விட்டால் அதனை அசைக்கவே முடியாது.
காதலை பொருத்தமட்டில் அழகை பார்க்காத காதலர்கள், அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் காதலர்கள் என பிரித்து பார்க்கலாம்.
காதல் என்றால் என்ன?
காதலிக்கும் போது தன்னுடைய துணைக்காக என்ன வந்தாலும் அதனை எதிர்க் கொள்ள தயாராக இருக்க வேண்டும். நாம் காப்பியங்களில், கதைகளில், புராணங்களில், காவியங்களில் இப்படி பல வழிகளில் காதல் பற்றி படித்திருப்போம். அப்போது எல்லாம் காதலில் இருக்கும் சுவாரஸ்யங்கள் பெரியதாக விளங்காது.
ஆனால் அதனை உணரும் போது சொர்க்க வாசலில் நிற்பது போன்று இருக்கும். இந்த உலகில் பெற்றோர்களை தவிர்த்து ஒரு உறவு நம் மீது அக்கறை காட்டும் என்றால் அது நம் காதலின் வெளிபாடு தான்.
அன்பு, அக்கறை செலுத்தக்கூடிய உயிர் ஒன்று தேவை. ஆணுக்கு ஒரு பெண். பெண்ணுக்கு ஒரு ஆண். பெற்றோரிடம் நாம் செலுத்தும் காதல் என்பது குடிநீரும், கண்ணீரும் போல் இரண்டும் ஒன்று போல் இருந்தாலும், அவை வேறுவேறு தான்.
ஆனால், ஆணுக்கும் – பெண்ணுக்கும் இடையே உள்ள காதல் என்பது தாகமும் குடிநீரும் போல்” ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. இதை தவிர காதலை கூற ஒரு வார்த்தை இல்லை.
1 அழகை பார்க்காத காதல்
நாம் வெளியில் செல்லும் போது சில காதலர்களை பார்த்திருப்போம். அவருக்கும் அவரின் துணைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இருக்காது. இது தான் அழகை பார்க்காத காதல், தற்போது இருக்கும் இளைஞர்கள் தன்னுடைய வயதிற்கு மேலுள்ள சிலரை காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள். இந்த காதல் அழகு மட்டுமல்ல வயதை கூட பார்க்காமல் வரும் காதல்.
2. அழகு- சொத்து பார்த்து வரும் காதல்
தன்னுடைய துனை நம்மை விட அழகாக இருக்கிறார். இதனால் அவரின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு அதன் மூலம் வரும் காதல். இந்த காதல் இறுதியில் சில சமயங்களில் பிரிவை சந்திக்கலாம். மற்றும் தன்னுடைய துணையிடம் நிறைய சொத்துக்கள் இருக்கின்றது.
இதனால் சிலர் காதலிப்பார்கள் ஆனால் அவர்களால் நீண்ட நாட்கள் இந்த விடயத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க முடியாது.
காதலிக்கும் போது அர்ப்பணிப்பு, விட்டு கொடுப்பு, தியாகம், வர்ணிப்பு, உணர்வுகள், ஏமாற்றங்கள், அன்பு ஆகிய விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதில் ஏதாவது ஒன்று குறைந்து விட்டாலும் காதலில் விரிசல் விழுந்து விட ஆரம்பித்து விடும்.
காதல் உணர்வுகளை சில வரிகளில்
- சிறுசிறு சண்டைகள் காதலின் அம்சம் பார்வைகள் சந்தித்தால் ஊடலும் பறந்துபோகும்.
- தோற்றுத்தான் போகின்றது என் பிடிவாதம் உன் அன்பின் முன்.
- நீயருகிலிருந்தால் இருளிலும் நான் பௌர்ணமியே..
- நம்மை உண்மையாக நேசிப்பவர்களுக்காக நம்மை நாம் மாற்றி கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை
- பார்த்த முகம் மறந்து போகலாம் ஆனால் பழகிய இதயம் ஒரு போதும் மறந்து போவதில்லை
- யார் இல்லாமல் வாழ முடியாதோ அவர்களோடு வாழ்வது தான்
- மகிழ்ச்சியான வாழ்க்கை நம்முடைய சூழ்நிலையை புரிந்துக் கொண்டு எல்லா நிலையிலும் நம்மோடு இருக்கும் உறவு கிடைப்பது வரம்
-
ஒருவர் மீது காதல் வர ஒரு காரணம் இருக்கும் ஆனால் அந்த காரணம் தான் யாருக்கும் தெரிவதில்லை
- நம்மை நேசிக்க ஆயிரம் பேர் இருந்தாலும் நாம் நேசிக்கும் ஒருவரை போல் ஆகி விட முடியாது
- அன்பிற்கும் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ ?
- நம்மை நேசிப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது தான் அவர்கள் மீது நாம் வைத்திருக்கும் அன்பு
- உயிராக இருப்பவர்களிடம் உரிமையாக இருப்பதை காட்டிலும் உண்மையாக இருப்பது தான் முக்கியம்
- நம்மை முழுவதும் புரிந்துக் கொண்ட ஒருவர் நம் வாழ்வில் இருப்பது நமக்கு கிடைத்த மிக பெரிய வரம்
- இதயத்தின் ஓசையை கேட்டு பார் துடிக்கும் அது உன் பெயர் சொல்லி எப்போதும்
- விட்டு கொடுத்து வாழ்வது மட்டுமல்ல காதல் கடைசி வரைக்கும் விட்டு விடாமல் வாழ்வதும் தான் காதல்
- கிடைக்காத ஒருவருடைய அன்பை எதிர்பார்த்து கிடைத்த ஒருவருடைய அன்பை இழந்து விடாதீர்கள்.
-
நம்முடைய கஷ்டத்தில் ஆறுதலாக என்ன வார்த்தை பேசினார்கள் என்பது நமக்கு முக்கியம் அல்ல யார் பேசினார்கள் என்பது தான் முக்கியம்.