ஆண் நண்பருடன் காதல், தனிக்குடித்தனம்: இளம்பெண்ணை விஷம் கொடுத்து துடிதுடிக்க கொன்ற இளைஞன்
தமிழகத்தில் தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த காதலிக்கு வேறொருவருடன் பழக்கம் ஏற்பட்டதால் விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மென்னவேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கார்த்திக் - பிரியங்கா தம்பதி. திருவாலங்காடு ஒன்றியம், நார்த்தவாடா கிராமத்தைச் சேர்ந்த ஜே.சி.பி ஒட்டுனர் ராஜ்குமார் என்பவனுக்கும் பிரியங்காவுக்கும் தவறான தொடர்பு இருந்துள்ளது.
ஒரு மாதத்துக்கு முன் கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு தனது தோழி பவித்ரா வீட்டுக்குச் செல்வதாகக் கூறி வீட்டைவிட்டு வெளியேறிய பிரியங்கா, திருவாலங்காட்டில் வாடகை வீடு எடுத்து ராஜ்குமாருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். வந்த இடத்தில் பிரியங்காவுக்கு மற்றொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தெரியவந்து, கடுப்பான ராஜ்குமார், பிரியங்காவுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளான். இதில் கோபித்துக்கொண்டு பிரியங்கா, தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார், அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் ராஜ்குமார் அங்கு சென்று பிரியங்காவை சமரசப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தார். பின்னர் அவரை தீர்த்து கட்ட நினைத்த ராஜ்குமார், பிரியங்காவை அடித்து துன்புறுத்தி புடவையால் அவரின் கைகளை கட்டிப்போட்டு விஷம் கலந்த குளிர்பானத்தை அவரது வாயில் ஊற்றினார்.
இதனால் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து பிரியங்கா மயங்கி விழுந்தார். உடனே ராஜ்குமார் பிரியங்காவின் தோழி பவித்ராவிற்கு போன் செய்து, பிரியங்கா விஷம் குடித்து விட்டதாக கூறி அவரை வர வழைத்துள்ளார்.
உடனடியாக இருவரும் பிரியங்கா மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவர் உயிரிழந்து விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த பவித்ரா, ராஜ்குமார் - பிரியங்கா விவகாரம் குறித்து போலீசாரிடம் தெரிவிக்க, உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.