பள்ளி மாணவிக்கு காதல் கடிதம்- ஆசிரியரை மடக்கி கிராமவாசிகள் கொடுத்த அதிர்ச்சி தண்டனை!
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை மொட்டையடித்து தெருவில் ஊர்வலமாக ஊர்மக்கள் கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்குறது.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் நகரில் மண்பூர் என்ற கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் 8-ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் காதல் கடிதம் கொடுத்து உள்ளார்.
இதையடுத்து, அவரை தொடர்ந்து சென்று துன்புறுத்தியும் வந்துள்ளார். காதலை ஏற்க மறுத்து விட்டால் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படும் என மிரட்டியும் வந்துள்ளார்.
இச்சம்பவம் அறிந்த ஊர் கிராம வாசிகள் ஆத்திரம் அடைந்து, அந்த ஆசிரியருக்கு மொட்டை அடித்து, முகத்தில் கரியை பூசியுள்ளனர்.
இதன்பின்னர், அவரை தெரு வழியே ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்த வந்த போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த வழக்கில் ஆசிரியரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.