காதல் தோல்வியால் வாழ்க்கையை வெறுத்து வாழ்கிறீர்களா?
காதல் என்பது கடவுள் படைத்த ஒரு அற்பதமான உணர்வு. இது வெறும் உணர்வு மட்டுமல்ல அதில் ஏகப்பட்ட அன்பும் அக்கறையும் தன்னாலே அடங்கி விடும்.
காதலனும் காதலியும் தங்களின் உணர்வுகளை விதவிதமாக பரிமாறிக்கொள்ளும் ஒரு அற்புதப்படைப்பே இந்தக் காதல். காதல் என்பது தற்போது அறியப்பட்டது அல்ல.
காலம் காலமாக சாதி, மதம், இனம், அழகு இப்படி எதுவும் பார்க்காமல் ஒரு முறை பார்த்தால் மற்றொரு முறை மனைவியாகவோ அல்லது காதலியாகவோ மனதுக்குள் தோண்டப்படுவதும் தோண்டப்பட்டுக் கொண்டிருப்பதும் இந்தக் காதல் தான்.
எதற்கும் ஒரு எதிர்வினை இருந்துக் கொண்டுதான் இருக்கும் அப்படி இந்தக் காதலுக்கும் ஒரு எதிர்வினை இருக்கத்தான் செய்கிறது. அதுதான் பிரிவு.
இந்தப் பிரிவை காதலர்கள் காதல் தோல்வியாக ஏற்றுக் கொண்டு தன்னையும் வருத்திக் கொண்டு தன்னை சுற்றி இருப்பவர்களையும் வருத்திக் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
காதல் தோல்வி என்றால் தாடி வளர்த்துக் கொண்டு, போதைகளுக்கு அடிமையாகி, துணைக்கு ஒரு நாயை வளர்த்துக் கொண்டு காலம் காலமாக இதைத்தான் செய்துக் கொண்டிருக்கிறார்கள் சினிமாவில் கூட. அதுவும் இல்லை என்றால் உயிரை மாய்த்துக்கொள்வார்கள்.
ஆனால் இந்த காதல் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியே தவிர வாழ்க்கை அல்ல. இதற்குப் பின்னால் உங்களைத் தவிர உங்கள் குடும்பமும் உள்ளது என்று நீங்கள் நினைத்தால் இதிலிருந்து இலகுவில் நீங்கள் வெளியில் வந்து விடுவீர்கள்.
காதல் தோல்வியிலிருந்து விடுபட
- ஒருவர் உங்களை விட்டுச் சென்று விட்டால் அந்த வலியையும், பிரிவையும் உங்கள் நிலைமையையும் ஒப்புக் கொள்ளுங்கள்.
- காதல் என்றால் என்ன என்பதையும் காதல் தோல்வியின் அர்த்தத்தையும் மனப்பூர்வமாக உணர்ந்துக் கொள்ளுங்கள்.
- இந்தப் பிரிவிற்குப் பின்னால் இன்னொரு வாழ்க்கை இருப்பதை உங்கள் எதிர்காலத்தையும் உற்றுநோக்குங்கள்.
- காதலைத் தவிர உங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
- காதல் பிரிவில் இருந்து நீங்கள் முழுவதுமாக விடுபட சில காலம் தேவைப்படும் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.
- காதல் பிரிவில் இருப்பவருக்கு நீங்கள் ஆறுதல் சொல்லுவது போல உங்களுக்கு நீங்களே ஆறுதல் சொல்லிக் கொள்ளுங்கள்.
- உங்களுக்கு ஏதேனும் நேர்மறை எண்ணங்கள் தோன்றினால் அதனை மாற்றிக்கொள்ள மருத்துவரை சந்தியுங்கள்.