போதைக்கு அடிமையாகி ரகசிய சிகிச்சை எடுக்கும் விமல்? அம்பலமாகிய உண்மை! புகைப்படம் உள்ளே
பிரபல நடிகர் விமல் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டிலிருந்து ரகசிய சிகிச்சை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விமல்
களவாணி படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விமல் பல படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவர் சமீபத்தில் விலங்கு என்ற வெப்சீரிஸில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றார்.
மேலும் பல படங்களில் நடித்துவரும் இவர், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல் வெளியான நிலையில், நடிகர் விமல் அதனை மறுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் போதைக்கு அடிமையாகி ரகசியமாக வீட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியான தகவலுக்கு கடும் கோபத்தில் விமல் அளித்த பதில் இதோ...
குறித்த விடயங்கள் அனைத்தும் பொய் என்று கூறி நடிகர் விமல் படப்பிடிப்பில் ரத்த கறையுடன் இருக்கும் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
பின்பு அவர் கூறுகையில், நான் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியான தகவல் அனைத்தும் பொய் என்றும் இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். தற்போது புதுமுக இயக்குனர் மைக்கேல் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருப்பதையும் கூறியுள்ளார்.
வேண்டாத விஷக் கிருமிகள் இது போன்று செய்து வருவதாகவும், இந்த சின்னப்புள்ள தனமான வேலையை விட்டுவிட்டு உருப்படியான வேலையை பாருங்கள். நீங்களும் வாழுங்கள், மற்றவர்களையும் வாழ விடுங்கள். தேவையில்லாமல் சில்லறை தனமா இந்த செய்திகளைக் கிளப்பி என்னை காயப்படுத்த நினைக்காதீர்கள் என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.