20 ஆண்டுகால காதல்... ஜோதிகாவின் திருமண உடையில் ஒளிந்திருந்த காதல் குறியீடுகள்!
20ம் ஆண்டு திருமண உறவை கொண்டாடும் விதமாக, சூர்யா – ஜோதிகா தம்பதியினர் தங்களின் மகன், மகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ள காணொளி நேற்றைய தினம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றர்.
இதில் காதலை உணர்த்தும் வகையில் ஜோதிகாவின் திருமண உடையில் பல குறியீடுகள் இடம்பெற்றிருந்தமை இணையத்தில் நெட்டிசன்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

ஜோதிகா உடையில் கவனம் ஈர்த்த காதல் குறியீடுகள்
கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றதால், ஜோதிகா வெள்ளை நிற திருமண கவுன் அணிந்திருந்தார். இந்த உடையில் காதலை உணர்த்தும் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருந்தன.இது தொடர்பான சுவாரஸ்ய அம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
மினிமலிசம்:ஜோதிகாவின் திருமண உடையில் முதலில் கவனம் ஈர்த்தது அதன் எளிமையான வடிவமைப்பு. ஆடம்பரமான ஜரிகை அல்லது அதிக வேலைப்பாடுகள் இல்லாமல், நவீன டிசைனில் இந்த உடை வடிவமைக்கப்பட்டிருந்தது. இது, அவர்களின் காதலுக்கு ஆடம்பரம் தேவையில்லை என்பதை உணர்த்துவது போல் அமைந்திருந்தது.

லவ் சிம்பள்: ஜோதிகா அணிந்திருந்த கவுனின் கழுத்துப்பகுதி ‘ஸ்வீட்ஹார்ட்’ டிசைனில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அவர்களின் காதலின் குறியீடாகக்கூட இந்த வடிவமைப்பு இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த வடிவம் ஜோதிகாவின் தோற்றத்திற்கு தனி அழகை சேர்த்தது.
இடுப்பு வடிவமைப்பு: ஜோதிகாவின் கவுனில் இடுப்பைச் சுற்றி நேர்த்தியாக செய்யப்பட்டிருந்த துணி சுருக்கங்களும் கவனம் ஈர்த்தன.
நீண்ட தரைதொடும் துணி: கிறிஸ்துவ திருமண முறையில் இடம்பெறும் நீண்ட தரைதொடும் துணி, ஜோதிகாவின் உடையிலும் இடம்பெற்றிருந்தது.ஆடையின் பின்புறத்தில் தரையில் நீளமாக இழுத்துச் செல்லும் வகையில் அமைந்திருந்த இது, அவருக்கு தேவதை போன்ற தோற்றத்தை அளித்தது.
அவர்களின் காதல் 20 ஆண்டுகளோடு நின்றுவிடாமல், தொடர்ந்து நீளும் என்பதை உணர்த்துவது போல் இந்த வடிவமைப்பு அமைந்திருந்தது.

வெள்ளி நிறத் துகள்கள்: வெள்ளை நிறத் துணியில் மென்மையாக மின்னும் வெள்ளி நிறத் துகள்கள் சேர்க்கப்பட்டிருந்தன. இது ஜோதிகாவின் தோற்றத்தை மேலும் மெருகூட்டியது.
அதேவேளை, வெள்ளை நிறம் தூய்மையைக் குறிப்பதால், சூர்யா – ஜோதிகாவின் 20 ஆண்டுகால கலங்கமில்லாத உண்மையான அன்பையும் இந்த நிறம் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.

இதுமட்டுமல்லாமல், தனது திருமண உடையின் அழகை முன்னிலைப்படுத்தும் வகையில் ஜோதிகா குறைவான நகைகள், நேர்த்தியான ஹேர்ஸ்டைல் மற்றும் சிம்பிளான மேக்கப்பை தேர்வு செய்திருந்தார். ஆடம்பரம் இல்லாத அதேநேரம் நேர்த்தியான இந்த திருமண தோற்றம், அவரது வாழ்க்கையையும் பிரதிபலித்தது போல் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |