ரேசிங் மைதானத்தில் மனைவி ஷாலினியை முத்தமிட்ட அஜித்... வைரலாகும் காணொளி
நடிகர் அஜித்குமார் கார்ரேசிங்கில் பற்கேற்பத்தற்கு முன்னர் தனது மனைவி ஷாலினியுடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு காதலுடன் கன்னத்தில் முத்தமிட்டு விடைப்பெற்ற காணொளியொன்று தற்போது இணையத்தில் வெளியாக வைரலாகி வருகின்றது.
அஜித்குமார்
90களில் திரைக்கு வந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கும் நடிகர் அஜித்குமார். காதல் மன்னன், ஆக்ஷன் ஹீரோ, வில்லன் என பல வேடங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகர்களில் ஒருவர். இவரை தல என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருவகின்றனர்.

அஜித் நடிப்பில் இதுவரையில் 63 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.அஜித் நடிப்பில் இறுதியாக "குட் பேட் அக்லி" (Good Bad Ugly) திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அஜித் நடிக்கும் 64வது திரைப்படத்திற்கு AK 64 என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார், மேலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.இத்திரைப்பத்தின் படப்பிடிப்பு 2026 ஆம் ஆண்டு பெப்ரவரியில் ஆரம்பமாகவுள்ளது.

நடிகர் அஜித் குமார், தற்போது கார் பந்தய அணி ஒன்றைத் தொடங்கி உலகெங்கும் பயணம் செய்து கார் ரேஸ்களில் பங்கேற்று வருகிறார்.
படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட அஜித், தன் வாழ்நாள் லட்சியங்களுள் ஒன்றான கார் ரேசில் பங்கேற்பதில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்த நிலையில், தற்போது மலேசியாவில் நடைபெறும் ஏஷியன் லீமென்ஸ் சீரிஸ் தொடரில் பங்கேற்றுள்ளார். மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை நடந்த போட்டியில், காரில் ரேடியேட்டர் பழுதானதால் அஜித்தால் போட்டியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ரேசிங்கிற்கு செல்லும் முன் தனது மனைவி ஷாலினியுடன் சில நொடிகள் பேசிய அஜித், போட்டியில் பங்கேற்க விடைபெறும்போது அவரது கன்னத்தில் முத்தமிட்ட காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |