IMEI எண் மூலம் தொலைந்து போன ஸ்மார்ட்போனை கண்டறிவது எப்படி?
இன்றைய காலத்தில் பலருக்கும் மொபைல் போனே உலகம் என்றாகிவிட்டது.
கைகளின் 6ம் விரலை போன்று அலங்கரிக்கிறது, அதுமட்டுமா பல முக்கியமான தகவல்கள், புகைப்படங்களையும் நாம் சேமித்து வைத்திருப்போம்.
ஒருவேளை உங்களது ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டு விட்டாலோ என்னவாகும்?
வங்கி கணக்குகள், மின்னஞ்சல்கள், புகைப்படங்கள் வெளியில் கசிந்துவிடும் அபாயம் இருக்கிறது அல்லவா?
இதற்கெல்லாம் தீர்வாக இந்த பதிவில் IMEI எண் கொண்டு ஸ்மார்ட்போனை மற்றவர்கள் பயன்படுத்தமுடியாதபடி Lock செய்வது எப்படி என தெரிந்துகொள்ளலாம்.
IMEI எண் என்பது என்ன?
International Mobile Equipment Identity என்பது 15 இலக்க எண்ணாகும். ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கு தனித்தனியாக IMEI எண்கள் வழங்கப்படும்.
நீங்கள் வாங்கிய ஸ்மார்ட்போனின் பில் அல்லது அட்டைப்பெட்டியில் இந்த எண் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
*#06# என டைப் செய்தும் IMEI எண்ணை தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் போன் தொலைந்துவிட்டால் எளிதில் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.
Lock செய்வது எப்படி?
* CEIRன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
* தொலைந்து போன போனின் மொடல், பிராண்ட் உட்பட அங்கே கேட்கப்பட்ட தகவல்களை பூர்த்தி செய்யவும்.
* கடைசியாக போன் தொலைந்துபோன இருப்பிடத்தின் கோரிக்கையை நிறைவு செய்யவும்.
* Get OTP என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். இறுதியில் உங்களுக்கென்று ஐடி ஒன்று கிடைக்கப்பெறும், இந்த எண்ணை கொண்டு போன் மறுபடியும் கிடைத்தவுடன் அன்லாக் செய்யலாம்.
* மேலும் மொபைல் ஆப்பரேட்டருக்கு தகவல் தெரிவித்தும் IMEI எண் மூலம் லாக் செய்யலாம்.