தர்ஷனுடன் மிகவும் நெருக்கமாக நடித்தது இப்படி தான்: ஜாலியாக லொஸ்லியா கொடுத்த விளக்கம்
சென்ற வாரம் கூகுல் குட்டப்பன் பட டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் இதில் லொஸ்லியா மற்றும் தர்ஷன் படுக்கை அறையில் மிகவும் நெருக்கமாக வைத்துள்ள ரொமான்ஸ் காட்சிகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது நாங்கள் இருவரும் அண்ணன் தங்கை என கூறிய லாஸ்லியா மற்றும் தர்ஷன் இப்பொழுது படுக்கை அறையில் மிகவும் நெருக்கமாக ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருப்பது எப்படி.
என பல சர்ச்சைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்க அதற்கு நடிகை லொஸ்லியா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தர்ஷன் எனக்கு அண்ணன் மாதிரி படத்தில் வரும் ரொமான்டிக் காட்சிகள் வெறும் நடிப்பு மட்டுமே யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் படத்தை படமாக மட்டும் பாருங்கள் நிஜவாழ்க்கையில் ஒப்பிடாதீர்கள் .
அந்தக் காட்சி எடுக்கப்பட்ட போது நாங்கள் இருவரும் சிரித்துக்கொண்டே செம ஜாலியாக தான் எடுத்து முடித்தோம். இது வெறும் நடிப்பு மட்டுமே என சர்ச்சைகளுக்கு ஒரே போடாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் லொஸ்லியா பதிலளித்துள்ளார்.