ரசிகர்களிடம் கேட்டு ஹேர் ஸ்டைலை மாற்றிய லாஸ்லியா!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மக்கள்மத்தியில் இடம்பிடித்த நடிகையான லாஸ்லியா, தற்போது வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
லாஸ்லியா மரியநேசன்
இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியநேசன் தனியார் தொலைக்காட்சியொன்றில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பணிபுரிந்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வாய்ப்பு வர போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழ் பேச்சால் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார்.
மேலும் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளராக இருந்த கவினுடன் காதல் வயப்பட்டார். இந்த காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவிக்கவே சிலகாலம் கவினுடன் பேசாமல் இருந்துவந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்ததும் அடுத்தடுத்து சில படங்களில் பிஸியாக தொடர்ந்து நடித்து வந்தார். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் லாஸ்லியா புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், தற்போது உடல் எடையை குறைத்து கொஞ்சம் கவர்ச்சி காட்டி வருகின்றார் லாஸ்லியா. இந்நிலையில், இவர் தனது புகைப்படத்தை வெளியிட்டு “Should I cut my hair short” என கேள்வி கேட்டுள்ளார்.
இதனைப்பார்த்த ரசிகர்கள் “வேண்டாம்..வேண்டாம்..” என கதறி அழுகிறார்கள்.