கடும் உடற்பயிற்சியில் லொஸ்லியா: ஜிம்மிலிருந்து வெளியி்ட்ட புகைப்படம்
நடிகை லொஸ்லியா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த நடிகை லொஸ்லியா தற்போது படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகின்றார்.
பல கோடி ரசிகர்களைக் கவர்ந்த இவர் பிரெண்ட்ஷிப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
கல்லூரி கதை களத்தில் பிரண்ட்ஷிப்பை மையப்படுத்தி உருவான இந்த திரைப்படத்தில் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்திருந்தார்.
இந்த படத்தினைத் தொடர்ந்து கூகுள் குட்டப்பா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். மலையாள படத்தின் ரீமேக்கான இப்படத்தில் தர்ஷனுடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்துள்ளார்.
இப்படத்தில் லொஸ்லியா, தர்ஷன் நெருக்கமான புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் திட்டித் தீர்த்தனர். ஆனாலும் தனது வேலையில் கவனம் செலுத்தி வரும் லொஸ்லியா தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கின்றாராம்.
திரில்லர் கதை களத்தில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கின்றார். இவ்வாறு அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வரும் லொஸ்லியா ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
பிங்க் டிரஸ்ஸில் இரண்டு கையிலும் இரண்டு டம்புல்களை வைத்துக்கொண்டு தீயாய் உடற்பயிற்சி செய்யும் லாஸ்லியா இதுதான் என்னுடைய மகிழ்ச்சியான இடம் என பதிவிட்டுள்ளார்.