சருமம் தங்கம் போல் ஜொலிக்கணுமா? அப்போ மஞ்சளை வைத்து இப்படி Skin Care பண்ணுங்க
'தங்க மசாலா' என அழைக்கப்படும் மஞ்சள் தமிழர்களின் பொக்கிஷமாக பார்க்கப்படுகின்றது.
பல நூற்றாண்டுகளாக இது ஆயுர்வேதத்தில் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதிலும் பல நாட்களாக ஆறாத காயங்களை குணப்படுத்துவதில் சக்தி வாய்ந்ததாக பொருளாக உள்ளது.
தற்போது உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் மூலிகை பொருட்களில் ஒன்றான மஞ்சள் சரும ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
மஞ்சளில் இருக்கும் வலிமையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து கொலாஜன் உற்பத்தியை அதிகப்படுத்துகின்றது. இதனால் சருமத்தில் புது பொலிவு கிடைக்கின்றது.
அந்த வகையில் மஞ்சளை வைத்து எப்படி பளபளப்பான சருமத்தை பெறலாம் என்பதனை இந்த பதிவில் பார்க்கலாம்.
மஞ்சள் பால்
தேவையான பொருட்கள்
- மஞ்சள் பால்- ஒரு கப்
செய்முறை
- சருமம் எப்போதும் கருமையாகவே இருக்கிறது வெண்மையாக்க வேண்டும் என நினைப்பவர்கள் ஒரு கப் மஞ்சள் பாலை உணவுடன் சேர்த்து கொள்ளலாம்.
- மஞ்சள் ஆக்ஸிஜனேற்றிகள் என்பதால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கின்றது.
- சிலர் இளமை வயதிலேயே வயதானது போல் தோற்றமளிப்பார்கள். இவர்கள் அவர்களின் வயதிற்கு வர இந்த மஞ்சள் பால் உதவியாக இருக்கும்.
- அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தை இறுக்கமாக்கும். அத்துடன் சருமத்தில் ஒரு வகையான நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கும்.இவ்வளவு பலன்களை பெற வேண்டும் என்றால் மஞ்சள் பால் குடிக்க வேண்டும்.
- மாறாக இந்த பாலை சாப்பிடுவதற்கு சரியாக 1 மணி நேரத்திற்கு முன்பு தான் குடிக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |