லொறியின் அடியில் மாட்டிக்கொண்ட கன்று... தாய்ப்பசு நிகழ்த்திய பாசப்போராட்டம்
லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்ட கன்றுக் குட்டியை காப்பாற்ற தாய் நடத்திய பாசப் போராட்டம் காண்பவர்களைக் கண்கலங்க வைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீழ் இரண்டாம் வீதியில் கடைக்கு சரக்கு இறக்குவதற்காக லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது பசுவுடன் வந்த கன்றுக்குட்டி லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டது.
லாரிக்கு அடியில் சென்ற கன்று வெளியே வர முடியாமல் அவதியடைந்தது. இதற்காக அங்கும் இங்கும் ஓடியது. அங்கிருந்த பொதுமக்கள் வந்து கன்றை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும் அவர்களை நம்பாமல் அதுவாகவே காப்பாற்ற சுற்றி சுற்றி ஓடியது.
இதையடுத்து கம்பை வைத்து தாய் பசுவை கட்டுப்படுத்த முயற்சி நடந்த நிலையில் கன்றின் கால்களை மடக்க செய்து லாரியின் வெளியிலிருந்து இழுத்தனர். இதையடுத்து கன்றை பார்த்த மகிழ்ச்சியில் பசுவும் கன்றும் ஒன்றையொன்று தழுவி கொண்டு தங்களது பாசத்தினை பரிமாறிய நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
