மேஷ ராசியில் நுழையும் சூரிய பகவான்: அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள்
ஒன்பது கிரகங்களின் அதிபதியான சூரிய பகவான் மேஷ ராசியில் ஏப்ரல் 14ம் திகதி சஞ்சரிக்கிறார்.
செவ்வாயுடன் இணைவதால் சில ராசிகளுக்கு நற்பலன்கள் கிட்டும், அவை எந்தெந்த ராசிகள் என பார்க்கலாம்.
மேஷ ராசி அன்பர்களே,
லக்னத்தில் சூரிய பகவான் நுழைகிறார், அப்போது குருபகவானும் இருப்பதால் செல்வ வளம் பெருகும், குடும்பத்தில் நிம்மதி உண்டாகும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும், திருமணமாகாத நபர்களுக்கு திருமணம் கைகூடும்.
ரிஷப ராசி அன்பர்களே,
11வது இல்லத்தில் சூரிய பகவான் வருவதால் வருமானம் பெருகும், புதிய தொழில் தொடங்க திட்டமிட்டுள்ள நபர்களுக்கு இது வசந்த காலமே, லாபம் உண்டாகும், வருவாய் அதிகரிக்கும், இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
விருச்சிக ராசி அன்பர்களே,
ஆறாம் வீட்டில் சூரிய பகவான் வருவதால் உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டு, பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும், நீங்கள் எதிர்பார்த்த வேலை கைகூடி வரலாம், நோய்களிலிருந்து குணமடைவீர்கள், குடும்பத்துடன் அனுசரித்து செல்வது இன்னும் சிறப்பை பெற்றுத்தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |