வலது பக்கமாக தும்பிக்கை வந்த பிள்ளையாரை வீட்டில் வைக்க கூடாது ஏன்னு தெரியுமா?
நாம் தெய்வங்களை வீட்டில் வைப்பதால் நமது வீட்டில் நல்லவை அனைத்தும் நடக்கும், நல்ல செய்தி வீடு தேடி வரும், மற்றும் நிம்மதியும், சந்தோஷமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திருவுருவ படங்களை வைக்கிறோம்.
அந்த வகையில் எல்லோரது வீட்டிலும் பிள்ளையார் சிலை அல்லது பிள்ளையார் படம் இருக்கும். ஆனால் விநாயகர் சிலையை வீட்டில் வைக்கும் போது சில விஷயங்களை தெரிந்துகொண்டே வைக்க வேண்டும்.
இப்படி இருக்க வீட்டில் எந்தெந்த பிள்ளையார் சிலையை வைக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
விநாயகர்
விநாயகர் சிலை வீட்டில் வைக்க வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் பல விஷயங்களை தெரிந்து கொண்டு அதன் விதிமுறைகளுக்கு ஏற்ப சிலையை வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்யாமல் நீங்கள் சிலையை வீட்டில் வைக்கும் போது வீட்டிற்று துரதிஷ்டம் வந்து சேரும். வீட்டில் பிள்ளையார் சிலையை ஒரு புகழ் பெற்ற வழி அல்லது வீட்டின் முக்கிய நுழைவாயிலுக்கு எதிராக வைக்கும் போது நன்மை தரும்.
திருஷ்டி விநாயகர் உங்கள் வீட்டிற்குள் நுழையும் அனைத்து தீய சக்திகளையும் தடுத்து, வளத்தை கொடுக்கும். முகப்பு வாயிலில் சிலை வைத்தால் ஜோடியாக தான் வைக்க வேண்டும்.
இதில் ஒன்று நுழைவாயிலை பார்த்த வண்ணம் இருக்க வேண்டும். விநாயகர் பின்புறத்தை பார்த்த படி இருந்தால் வீட்டிற்கு வறுமை வந்து சேரும்.
வலது பக்கமாக தும்பிக்கை வந்த பிள்ளையாரை நீங்கள் வாங்க கூடாது. இந்த சிலையை வீட்டில் வைத்தால் பூஜையின் போது விசேஷ கவனமும் பராமரிப்பும் செலுத்த வேண்டும்.
இவைகளை வீட்டில் செய்வது கடினம். அதனால் தான் இந்த சிலைகளை கோவில்களில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.
வீட்டில் பிள்ளையார் சிலையை வைக்க வேண்டும் என்றால் இடது பக்கமாக அல்லது நேராக உள்ள அல்லது காற்றில் இருக்கும் தும்பிக்கையை கொண்ட விநாயகரை வையுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |