வயிற்றுப்போக்கை சரிசெய்யும் Loparet மாத்திரைகள்
வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கு மருந்தாகிறது Loparet மாத்திரைகள், ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கை சரிசெய்யாது.
மருத்துவரின் அறிவுரைப்படி உணவுடன் அல்லது உணவு இல்லாமல் இம்மாத்திரைகளை பயன்படுத்தலாம்.
மருத்துவர் பரிந்துரைக்கும் நாட்கள் முழுமையும் எடுத்துக்கொள்ளவும், அளவுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.
சுயமாகவே மருந்துகளை நிறுத்துவது நோயின் தீவிரத்தை அதிகப்படுத்த நேரிடலாம்.
மற்ற மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருந்தால் மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கவும்.
பக்கவிளைவுகள்
தலைவலி
குமட்டல்
மலச்சிக்கல்
இது தற்காலிகமானதே, தானாக சரியாகவிடும், எனினும் பக்கவிளைவுகள் தீவிரமாக இருந்தாலோ, வேறு ஏதேனும் தொந்தரவுகள் இருந்தாலோ மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
இது மயக்கத்தை உண்டுபண்ணலாம், எனவே மாத்திரைகள் எடுத்துக்கொண்ட பின்னர் வாகனங்களை இயக்குவது பாதுகாப்பானதாக இருக்காது.
குறிப்பாக ஆல்கஹால் எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். மாத்திரைகள் பயன்படுத்தினாலும் அதிகளவில் தண்ணீர் அருந்துங்கள், உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்.
மலச்சிக்கல் தீவிரமாக இருந்தாலும், ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு இருந்தாலும் Loparet மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம்.
Loparet மாத்திரைகளை அப்படியே விழுங்கிவிடவும்.
* இது தூக்க கலத்தை உண்டுபண்ணும் என்பதால் ஆல்கஹால் பயன்படுத்துவதையும், வாகனங்கள் இயக்குவதையும் தவிர்க்கவும்.
* கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானது அல்ல, மருத்துவரிடம் அறிவுரை பெறவும்.
* தாய்ப்பாலூட்டும் பெண்கள் எடுத்துக்கொள்ளலாம் என்றாலும் மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்கவும்.
* சிறுநீரக நோயாளிகளுக்கு பாதுகாப்பானது என்றாலும், மருத்துவரின் முறையான அறிவுரைப்படி குறிப்பிட்ட அளவுகளில் மட்டும் எடுக்கவும்.
* கல்லீரல் நோயாளிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.
குறிப்பு- எந்தவொரு மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக எடுத்துக்கொள்வது ஆபத்தை உண்டு பண்ணும்.