3 நாட்களாக மருத்துவரை தேடி திரிந்த குபேரன்.... ஒரே இரவில் கோடீஸ்வரரான அதிசயம்!
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவருக்கு கேரளா அரசின் லாட்டரி குலுக்கலில் 10 கோடி ரூபாய் பரிசு கிடைத்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பேசு பொருளாக உள்ளது.
மலையாள புத்தாண்டு விஷு பண்டிகையை ஒட்டி கேரளா அரசின் லாட்டரி சீட்டு பம்பர் குலுக்கல் நடைபெற்றது.
முதல் பரிசாக 10 கோடி ரூபாய்க்கு உரிய லாட்டரி சீட்டு எண் அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்த நிலையில் பரிசுக்குரிய நபர் யாரென கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் கேரளாவில் ஒட்டுமொத்த மக்களும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என தேடி வந்துள்ளனர்.
தற்போது அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் என வந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக பணிபுரிந்து வரும் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த டாக்டர் பிரதீப் குமார் மற்றும் அவரது உறவினரான ரமேஷ் ஆகியோர் சேர்ந்து இந்த லாட்டரி சீட்டை ஏற்கனவே திருவனந்தபுரத்திலிருந்து வாங்கிய நிலையில் அவர்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு கிடைத்துள்ளது .
அவர்கள் நேற்று முன்தினம் தான் தங்களுக்குரிய எண்ணுக்கு தான் பரிசு கிடைத்ததை என அறிந்துள்ளனரை்.
பிறகு விரைந்து சென்று லாட்டரி துறை அலுவலகத்தில் விவரத்தை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்களின் பரிசு தொகை கொடுக்கப்பட்டுள்ளது.