நீண்ட நேரம் ஏசியில் இருந்து வேலை செய்பவரா நீங்கள்? இந்த அதிர்ச்சி பதிவு உங்களுக்கே
ஏசி அறையில் நீண்ட நேரம் இருந்தால், ஆரோக்கியத்திற்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அதிக நேரம் ஏசி அறையில் அமர்ந்தால்?
இன்று பலரும் ஏசி அறையை அதிகமாக விரும்புகின்றனர். இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் வெப்பத்தின் தாக்குதலே ஆகும்.
ஏசி அறையில் நீங்கள் அதிக நேரம் இருந்தால் உங்களது சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதம் இல்லாமல் போவதுடன், சருமத்தில் வறட்சி மற்றும் எரிச்சல் ஏற்படுகின்றது. மேலும் தோலில் அசௌகரியத்தையும் ஏற்படுத்துகின்றது.
அதிக நேரம் குறித்த அறையில் இருந்தால் வறண்ட காற்கு உடலிலிருந்து அதிக நீர் இழப்பை ஏற்படுத்துவதுடன், சோர்வு மற்றும் தலைவலி பிரச்சனையை ஏற்படுத்தும்.
ஏசியை சரியாக பராமரிக்காவிட்டால், அதிலுள்ள தூசி சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்துவதுடன், சுவாசக் குழாயில் எரிச்சலை ஏற்படுத்தி ஆஸ்துமாவை அதிகரிக்கச் செய்கின்றது.
மேலும் இதிலிருந்து வரும் வறண்ட காற்று, கண்களில் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகின்றது.
தசைகள் மற்றும் மூட்டுகளில் விறைப்பை ஏற்படுத்துவதுடன், இதனால் வலியும் அதிகரிக்கின்றது. மேலும் மந்தமான உணர்வையும் ஏற்படுத்துகின்றது.
நீண்ட நேரம் ஏசியில் இருந்துவிட்டு வெளியில் வந்தால் உடல் சூடு மாறி திடீர் தலைவலியை ஏற்படுத்துவதுடன், இது பெரும்பாலும் ரத்த நாளங்களின் பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |