நீண்ட நேரம் AC-யை பயன்படுத்துறீங்களா? இந்த விடயத்தை கட்டாயம் செய்திடனும்
கோடை காலத்தில் ஏசி அதிகமாக ஓடினால் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பலரும் இன்று குளிர்ச்சியான இடத்தை தேடியும், அல்லது வீட்டில் வெப்பம் தெரியாத அளவில் இருப்பதற்கு ஆசைப்படுகின்றனர்.
ஆதலால் பெரும்பாலான நபர்களின் வீடுகளில் ஏசி என்பது கட்டாயமாக இருந்து வருகின்றது. இதனை மழைகாலம் என்றாலும் பயன்படுத்தும் பழக்கம் சிலரிடம் இருந்து வருகின்றார்.
நீண்ட நேரம் AC-யை பயன்படுத்துகின்றீர்களா?
வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஏசியை பயன்படுத்துபவர்கள், தொடர்ந்து இடைவெளி இல்லாமல் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் Compressor அதிகளவு வெப்பமடைவதுடன், சேதமடையவும் செய்கின்றது. அதாவது ஏசி-யை ஒவ்வொரு மணிக்கும் குறைந்தது 5 முதல் 7 நிமிடங்கள் அணைத்து வைக்க வேண்டும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இவ்வாறு செய்வதன் மூலம் ஏசி-யில் இருக்கும் Compressor அதிகமாக வெப்பமடைவதை தடுக்கின்றது. மேலும் Compressor பழையதாக இருந்தால் விரைவில் தீப்பிடிக்கவும் வாய்ப்புள்ளது.
எனவே, குறிப்பிட்ட காலத்தில் ஏசியில் உள்ள Compressor -யை மாற்ற வேண்டும். மேலும், கம்பரசரை சுற்றி காற்றோட்டம் இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளவும் வேண்டும்.
ஆதலால் ஏசியை சரியான நேரத்தில் அணைத்து வைத்துவிட்டு பின்பு பயன்படுத்தினால், ஏசி-யும் பழுதாகாமலும், மின்சார கட்டணமும் சற்று குறைவாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |