மழைநேரத்தில் குடையை இப்படியும் பயன்படுத்தலாமா? இது தெரியாம போச்சே!
மும்பையில் பருவ மழையால் மக்கள் படும் அவஸ்தைக்கு மத்தியில் வெளியே செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் ஒரு நபர் இந்த மழைக்கால நேரத்தில் குடையை வித்தியாசமாக பயன்படுத்துகின்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
மும்பையில் பருவமழை துவங்கி உள்ளது. நாட்டின் பொருளாதார தலைநகராக இருக்கும் மும்பையில் கனமழை பெய்தால் பல லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படும்.
அன்றாடம் வேலைக்கு செல்லும் பலரும் ஒரு கையில் குடையை பிடித்து கொண்டிருந்தாலும், மழையில் நனைந்தபடி பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தி அடித்து பிடித்து வேலைக்கு ஓடி செல்லும் காட்சிகள் மும்பை நகரின் பரபரப்பை நமக்கு எடுத்துக்காட்டும்.
அந்த வகையில் இருககைளாலும் வேலை செய்து கொண்டே மழையில் குடையையும் பிடித்து செல்லும் சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Finally, we’re seeing some consistent rain in Mumbai this monsoon.
— anand mahindra (@anandmahindra) June 22, 2024
Not heavy enough for our liking, but it’s probably time to plan our ‘wardrobe for wetness.’
May be a good idea to think about a ‘wearable’ umbrella
Clever…pic.twitter.com/7pjyFAMJ6O
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |