லண்டன் பெண்ணை மணந்த தமிழக இளைஞர் - குவியும் வாழ்த்துக்கள்
லண்டன் பெண்ணை தமிழக இளைஞர் திருமணம் செய்த சம்பவம் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் உண்ணாமலை செட்டிசாவடி அடுத்த பத்மாவதி நகரை சேர்ந்தவர் ராஜாமணி. இவரின் மகன் ரஞ்சித் என்ஜினீயரிங் படித்த இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

அப்போது இவருக்கும் அன்னாலுய்சாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்ய பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

இதன்பின்னர் கடலூர் அருகே திருவந்திபுரம் பகுதியில் உள்ள மண்டபத்தில் தமிழ் பாரம்பரிய முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைப்பெற்றது.
இவர்களின் திருமணத்தை பலரும் பாராட்டினர். மேலும், மேல தாளத்துடன் கரம்பிடித்த இந்த ஜோடிகளுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.