அதிகம் பேசுவது நோயா? பலரும் அறியாத அறிகுறிகள்
சிலர் தேவையில்லாமல் அதிகமாக பேசிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று சில சமயங்களில் அவர்களுக்கே தெரியாமல் இருக்கலாம். மற்றவர்கள் முன்னர் தங்களை பெரிய ஆள் போன்று காட்டிக் கொள்வதற்காக இவர்கள் இப்படி அதிகமாக பேசுவார்கள்.
இன்னும் சிலர் மனதில் உள்ள விடயங்களை அனைவரும் பார்க்க பேசி விடுவார்கள். இதுவே அவர்களுக்கு நாளைய நாளுக்கான பிரச்சினையாக உருவெடுக்கும்.
இந்த விடயத்தை புரிந்து கொள்ளாமல் சக நண்பர்கள், உடன் வேலைச் செய்பவர்கள், காதல் உறவில் இருப்பவர்கள், சகோதர்கள், கணவர்-மனைவி இப்படி யார் கிடைத்தாலும் வரைமுறையல்லாமல் பேசுவார்கள். இந்த பழக்கம் ஒரு நோய் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
அந்த வகையில் மற்றவர்களிடம் அதிகமாக பேசுபவர்களுக்கு உடலில் என்ன பிரச்சினை இருக்கலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

லோகோரியா அஃபாசியா
ஒருவர் தன்னை அறியாமல் அதிகமாக பேசிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு Logorrhea எனப்படும் நோயின் தாக்கம் இருக்கலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு கட்டுபாடு இல்லாமல் தலைப்பை மாற்றி மாற்றி பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு ஒரு விடயத்தில் தெளிவு இருக்காது.
மற்றவர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு தராமல் அவர்களே பேசி விடுவார்கள். அதன் பின்னர் சரியாக பேசவில்லை என சண்டைப் போடுவார்கள. இந்த நோய் நிலைமை, பேச்சு குறைபாடு, மனநிலை மாற்றங்கள் (பைபோலார்), மனச்சிதைவு, மூளைக் காயங்கள் அல்லது பக்கவாதம் போன்ற சில நரம்பியல் பிரச்சனைகளால் கூட வர வாய்ப்பு உள்ளது.

அர்த்தமற்ற சொற்களை அதிகமாக பயன்படுத்துவார்கள். ஏனெனின் அவர்கள் ஒரு தெளிவில் இருக்கமாட்டார்கள். சிலர் நான் அதிகமாக பேசுவேன் என நகைப்புடன் கூறுவார்கள். இதுவும் ஒரு குறைபாடு என்பது அவர்களுக்கு சில சமயங்களில் தெரியாமல் இருக்கலாம்.
எப்படி சரிச் செய்யலாம்?
- அஃபாசியாவில் உள்ள லோகோரியா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பேச்சின் வேகத்தை குறைத்து விட முயற்சி செய்யலாம்.
- அவர்களின் சிந்தனையை சரிப்படுத்திக் கொள்ள உதவிச் செய்யலாம்.
- சைகைகள் மற்றும் எழுத்து மூலம் அவர்கள் கூற விரும்புவதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
- சிந்தனை, நடத்தை ஆகியவற்றை பலப்படுத்தல். சிறந்த தொடர்பாடலை வளர்த்துக் கொள்ள அவர்களுக்கு நாம் உதவிச் செய்யலாம்.
[
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW