வாங்கிய கடனுக்கு மகனை அடமானம் வைத்த தந்தை: நம்பமுடியாத உண்மை
இந்திய மாநிலமான தமிழகத்தில் பெற்ற தந்தை ஒருவர் தான் வாங்கிய கடனுக்காக மகனை அடமானம் வைத்துள்ள சம்பவம் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரமக்குடி நகைக்கடை பஜாரை சேர்ந்த ரமேஷுக்கும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த சரண்யாவுக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு ரூபேஷ்(13) என்ற மகனும், ஹர்சிதா(11) என்ற மகளும் உள்ளனர்.
நகைக்கடை கடை நடத்தி வந்த ரமேஷிற்கு நஷ்டம் ஏற்பட்டதால், சரண்யாவின் நகையினை விற்று தொழில் நடத்தி வந்துள்ளார்.
மேலும் பலரிடம் கடன் வாங்கி அடைக்கமுடியாமல் தவித்துள்ள நிலையில், கடன் கொடுத்தவர்கள் அதிகமாக தொந்தரவு செய்துள்ளனர். இதனால் கணவர் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்ததால் மகன் ரூபேஷை கடன் பெற்றவர்களிடம் காலை ஒப்படைத்துவிட்டு பணம் செலுத்திய பின்பு மீண்டும் இரவு வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
இது தொடர்ந்து 2 மாதம் நடைபெற்றதால் சரண்யா காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால், ரமேஷ் சரண்யாவை வீட்டைவிட்டு வெளியே அனுப்பியுள்ளார்.
இதன் பின்பு காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் சரண்யா சமரசம் ஆகாமலம் தர்ணா செய்துள்ளார்.
இதுகுறித்து சரண்யா கூறுயில், எனது கணவருக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக எனக்கு வரதட்சணையாக அளிக்கப்பட்ட அனைத்து நகைகளையும் விற்றுவிட்டார். கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்வதால் எனது மகனை தினசரி அடமானம் வைக்கிறார்.
என் மகனுக்கு காலை முதல் மாலை வரை உணவு கூட அளிக்காமல் கடன் கொடுத்தவர்கள் சித்ரவதை செய்கின்றனர். எனது கணவரும் மாமனாரும் என்னையும்,குழந்தைகளையும் அசிங்கமாக பேசி தொந்தரவு செய்து இன்று வீட்டை விட்டு வெளியே விரட்டி விட்டனர்.
கடனுக்காக எனது மகனை அடமானம் வைக்கும் கணவர் ரமேஷ் மீது மற்றும் கடன் கொடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
