எல்கேஜி சிறுமிக்கு தொல்லை.. தர்ம அடி வாங்கிய டிரைவர்! நடந்தது என்ன?
எல்கேஜி படிக்கும் சிறுமிக்கு தொல்லை கொடுத்த பள்ளி முதல்வரின் கார் டிரைவருக்கு தர்ம அடி கொடுக்கும் வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தெலங்கானாவில் எல்கேஜி படிக்கும் சிறுமிக்கு தொல்லை கொடுத்த பள்ளி முதல்வரின் கார் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்து, குழந்தையின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
தொல்லை
பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில், எல்கேஜி சிறுமிக்கு பள்ளி முதல்வரின் கார் டிரைவராக உள்ள ரஜினிகுமார் 2 மாதங்களாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனையறிந்த சிறுமியின் பெற்றோர், பள்ளிக்கு வந்து ரஜினிகுமாரை சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து இவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இவரை பெற்றோர் தாக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.
DAV public school Hyderabad 4 years old girl raped by school principal's driver for over 2 months.
— V.S (@join_vs) October 19, 2022
Why we should not kill them #telangana #hyderabad #rape #daughter pic.twitter.com/MmhpBgMcIY