அடிக்கடி கனவில் பல்லி வந்தால் சுப பலனா அசுப பலனா? சாஸ்திரம் கூறுவது இதுதான்
நமக்கு வரக்கூடிய கனவுகள் பல்வேறு பலன்கள் தரக்கூடியதாக அமைகின்றன.நம்முடைய வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
சொப்ன சாஸ்திரத்தின்படி நாம் காணக்கூடிய கனவுக்கு சில பலன்கள் உண்டு. அதே போல பொதுவாக எல்லாக் கனவுகளுக்கும் பலன் உண்டு.
இவை எவ்வகையான கனவுகளாக இருந்தாலும் இதற்கு ஒரு அர்த்தம் உள்ளது. அந்த வகையில் சொப்பன சாஸ்திரத்தின்படி கனவில் அடிக்கடி பல்லி வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பல்லி கனவு பலன்
ஒரு பல்லி பூச்சிகளைக் கொல்வதைப் போன்ற கனவு ஒருவருக்கு கனவில் ஒரு பல்லி பூச்சிகளை பிடித்து சாப்பிடுவது போல கனவு வந்தால் அவருக்கு நிதி சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் நிதி நெருக்கடிகள் ஏற்படும்.
பல்லியைக் கொல்வது போன்ற கனவு காணுதல் கனவில் ஒரு பல்லியை கொல்வது போன்ற கனவு வந்தால், அந்த நபரின் வாழ்க்கையில் பெரிய ஒரு பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும் என்று பொருள். இது சுப பலனை தரும்.
வீட்டிற்கு பல்லி நுழைவது போன்ற கனவு ஒருவருக்கு பல்லி வீட்டில் நுழைவது போன்ற கண்டால், அந்த நபர் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஏனெனில் அந்த நபரின் குடும்பத்தினருக்கு ஒரு பெரிய ஒரு பிரச்சனை வரப்போகிறது என சாஸ்திரம் கூறுகிறது.
கனவில் ஒரே இடத்தில் நிறைய பல்லிகளைப் பார்ப்பது ஒருவர் ஒரு இடத்தில் பல பல்லிகள் இருப்பது போல கனவு கண்டால் அது அசுபமாக கருதப்படுகிறது.
இது அவர்களின் வாழ்க்கையில் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை தரக்கூடியதாக இருக்கும். குறிப்பாக பணியிடத்தில் வேலைப் பளுவால் மன அழுத்தம் உண்டாகும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).